Home சமையல் குறிப்புகள் நாட்டுக்கோழி ரசம்

நாட்டுக்கோழி ரசம்

32

தேவையானவை: நாட்டுக்கோழி – ஒரு கிலோ, தக்காளி – 300 கிராம், சின்ன வெங்காயம் – கால் கிலோ, பட்டை, சோம்பு – சிறிதளவு, ஆச்சி மஞ்சள்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், ஆச்சி மிளகாய்த்தூள் – 5 டேபிள்ஸ்பூன், ஆச்சி மல்லித்தூள் – 4 டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – 2 டேபிள்ஸ்பூன், பூண்டு – 10 பல், சின்ன வெங்காயம் – 5, எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நாட்டுக்கோழியை நடுத்தரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

தக்காளி, சின்ன வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்.

மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக நசுக்கி எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து… நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

இத்துடன் நாட்டுக்கோழியையும் சேர்த்து வதக்கவும்.

பிறகு, ஆச்சி மஞ்சள்தூள், ஆச்சி மிளகாய்த்தூள், ஆச்சி மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

இதில் நான்கு லிட்டர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

கறி நன்கு வெந்ததும் நசுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் போட்டு இறக்கினால்…

‘கமகம’வென்று நாட்டுக்கோழி ரசம் ரெடி! இதை சூடான சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.

நாட்டுக் கோழி ரசம் ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் அளிக்கு