Home சூடான செய்திகள் நாடகங்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன் – ராதிகா ஆப்தே

நாடகங்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன் – ராதிகா ஆப்தே

24

சினிமாவில் நடித்தாலும், நாடகங்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன் என்கிறார் ‘தோனி’, ‘வெற்றிச் செல்வன்’ நாயகி ராதிகா ஆப்தே.

ரத்த சரித்திரம், தோனி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மராட்டிய நடிகை ராதிகா ஆப்தே.

சமீபத்தில் நடிக்க வந்தவர்களில் நம்பிக்கைக்குரிய நடிகையாகப் பார்க்கப்படுபவர். பிறப்பிடம் மராட்டியம் என்பதாலோ என்னமோ, இவருக்கு இயற்கையிலேயே மேடை நாடகங்கள் மீது பெரிய ஈடுபாடு.

“சினிமா வாய்ப்பு வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நான் நாடகங்களில் நடித்துள்ளேன். சினிமா பாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு பெரிய சவால் எதுவும் இல்லை.

தோனிக்குப் பிறகு வெற்றிச் செல்வன் படத்தில் நடிக்கிறேன். சினிமாவில் முதல்முறையாக நான் நடிக்கும் ரொமான்டிக் வேடம் இது. இதுதான் கஷ்டமாக இருக்கிறது.

சினிமா வாய்ப்புகளைவிட எனக்கு நாடக வாய்ப்புகள் முக்கியமாகப் படுகிறது. விரைவில் லண்டனில் நடக்கவிருக்கும் முக்கியமான சில நாடகங்களில் பங்கேற்க உள்ளேன்,” என்றார்.