உயரம்…, பலர் வாழ்க்கையை கேலி, கிண்டலுக்கு ஆளாக்கும் ஓர் விஷயம். உயரம் கம்மியாக இருந்தாலும் கேலி செய்வர்கள், உயரம் அதிகமாக இருந்தாலும் கேலி செய்வார்கள். உயரம் அதிகமாக இருந்தால் கூட கேலி செய்பவர்களை தலையில் தட்டி ஓட வைத்துவிடலாம். ஆனால், உயரம் கம்மியாக இருப்பது தான் பிரச்சனை.
உங்கள் தசையை பெரிதாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்வதற்கான இரகசியங்கள்!!! அவரவர் மரபணு தான் உடலின் மொத்த இயக்கத்திற்கும், செயல்பாட்டிற்கும் அடிப்படையாக திகழ்கிறது. ஆயினும், உயரத்தை பொருட்டு பார்த்தல் மட்டும், ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
40 வயதிலும் சிக்கென்று ஆரோக்கியமாக இருப்பது எப்படி? சரி, இனி உயரம் அதிகமாவதற்கு உதவும் சிறந்த உடற்பயிற்சிகள் குறித்துக் காணலாம்….
நீச்சல் நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது நீங்கள் சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.
தொங்குவது இதை நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருகலாம், ஏன் நேரில் கூட கண்டிருக்கலாம். இது உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உங்கள் உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.
குனிந்து கால் விரல்களை தொடுவது நீங்கள் குனிந்து கால் விரல்களை தொட முடியவில்லை என்றால் தொடர்ந்து முயற்சி செயுங்கள், ஓர் வாரத்தில் நீங்கள் இந்த பயிற்சியில் வெற்றி கண்டிட முடியும். இதுவும், உங்கள் உடலை நன்கு ஸ்ட்ரெச் செய்ய உதவும். குனிந்தவுடன் எழுந்திரிக்க கூடாது, குனிந்து உங்கள் கால் விரல்களை பிடித்து ஓரிரு நொடிகள் பிடித்திருக்க வேண்டும். அதன் பின் தான் எழுந்திரிக்க வேண்டும்.
கோப்ரா ஸ்ட்ரெச் இந்த கோப்ரா ஸ்ட்ரெச்சிங் பயிற்சி உங்கள் தண்டுவடத்தை நீட்டிக்க உதவிகிறது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உயரம் அதிகரிக்கும். படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போல, கைகளை கீழே ஊனி, உங்கள் தோள்பட்டையை மட்டும் முடிந்த வரை மேல் உயர்த்த வேண்டும். உங்கள் முகம் நேராக பார்த்திருக்க வேண்டும்.
இடுப்பை உயர்த்துதல் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள படி, கீழேப் படுத்து, உங்கள் இடுப்பை மட்டும் உயர்த்த வேண்டும். உங்கள் இடுப்பை உயர்த்தி 20-30 வினாடிகள் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சி உங்கள் உயரம் அதிகரிக்க சிறந்த முறையில் உதவும்.
ஸ்கிப்பிங் உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம்.
கால்களை மேல் உயர்த்துதல் நிலத்தில் படுத்து உங்கள் கால்களை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இது உங்கள் இடுப்பு பகுதியையும், கால் பகுதியையும் நன்கு ஸ்ட்ரெச் செய்ய உதவும். ஒரே நாளில் இந்த பயிற்சியை சரியாக செய்வது கடினம் தான், எனவே, தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.
பிலேட்ஸ் பயிற்சி (Pilates Roll Over) படத்தில் காண்பித்துள்ள படி, தரையில் படுத்து, உங்கள் கால்களை உங்கள் தலைக்கு பின் தசையில் உயர்த்தி தரையை தொடும் படி செய்தல் வேண்டும். இது உங்கள் இடுப்பு, தண்டுவடம், மற்றும் கால்கள் நன்று ஸ்ட்ரெச் ஆக உதவும். இதனால், நீங்கள் சீரான முறையில் உயரமாக முடியும்.