பொதுவாக நம்ம ஊர் காதல் கலாச்சாரத்தில் சொல்லப்படுவது ,என்னவென்றால் ,காதலர்கள் காதலை மட்டும் கொண்டாட வேண்டும் .
காமத்தை அல்ல என்று .நடைமுறையில் இந்த கோட்பாடை கொஞ்சம் கொஞ்சமாய் தகர்த்துகொண்டே இருக்கிறார்கள் இன்றைய காதலர்கள் .
காதல் என்று வந்துவிட்டால் ,காமம் வெளிப்படாமல் போவதில்லை .சரி ,அறிமுகமில்லாத ,ஆண்,பெண் இருவரும் ஒருவொருக்கொருவர் விருப்பபட்டு காமத்தை வெளிபடுத்தினாலும் ,அந்த இடத்தில் காதல் பூக்குமா ? பூக்காதா ? அதுதான் இந்த படத்தின் ஒன் லைன் கதை .
ஹீரோ வேலை விசயமாக , நியுயார்க் வருகிறார் .ஹீரோயின்தான் ஹீரோவுக்கு நேர்காணல் நடத்துகிறார் .ஹீரோ பளிச்சென இருப்பதால் ஹீரோயினுக்கு பிடிக்கிறது . நம்மூர் பெண்கள் சொல்வது போல் ,பிரெண்ட்சாக இருக்கலாமென சொல்லுகிறார் .ஹீரோவும் சம்மதிக்கிறார் .பல விஷயங்கள் பேசுகிறார்கள்.பேச்சு அப்படியே செக்ஸ் பக்கம் திரும்புகிறது .