பாசுமதி அரிசி – 250 கிராம்,
வெங்காயம் – ஒன்று,
தக்காளி – 2,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
பாதாம், முந்திரி – தலா 50 கிராம்,
நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
அரைக்க:
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பூண்டு – 10 பல்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
தனியாத்தூள் – அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்.
சோம்பு – அரை டீஸ்பூன்,
பட்டை – 2 துண்டு,
கிராம்பு, ஏலாக்காய் – தலா 2.
செய்முறை:
* அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். * அரைக்க கொடுத்துள்ளவற்றை பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய், எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* அதனுடன், நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நன்கு வதங்கியபின் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
* இதில் 2 கப் தண்ணீர் விட்டு கலந்து, தண்ணீர் கொதித்தபின் ஊற வைத்த அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.
* வெந்ததும் பாதாம், முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்து சேர்த்து இறக்கவும். ராய்தாவுடன் பரிமாறவும்.
* தேவைப்பட்டால் உங்களுக்கு விருப்பமான நட்ஸ் எதை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.