Home ஆரோக்கியம் பொது மருத்துவம் தொப்புள் வடிவம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது என தெரிந்து கொள்ள வேண்டுமா?

தொப்புள் வடிவம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது என தெரிந்து கொள்ள வேண்டுமா?

43

நம் உடலின் ஒவ்வொரு பாகங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளது. மேலும் நம் உடலின் சில உறுப்புக்கள் நம் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மறைமுகமாக சுட்டிக் காட்டும். உதாரணமாக, நம் கைகள், நாக்கு, கருவிழியின் நிறம் போன்றவை நமக்கு எந்த வகையான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்பதைச் சொல்லும்.

அதேப் போல் நம் தொப்புள் வடிவமும் நம் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லும் என்பது தெரியுமா?நம் தொப்புளின் வடிவத்தைக் கொண்டு ஒருவர் ஆரோக்கியத்துடன் உள்ளாரா, இல்லையா, எந்த நோயின் தாக்குதல் அதிகம் இருக்கும் போன்றவற்றை சொல்ல முடியும் என தொப்புளை ஆராயும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பெரிய கட்டியைக் கொண்ட தொப்புள்

பெரிய கட்டியைக் கொண்ட தொப்புள்
உங்கள் தொப்புளினுள் கட்டிப் போன்று ஏதோ ஒன்று நீட்டிக் கொண்டுள்ளதா? அதிலும் அது அப்படியே இருந்தால், எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் பெரிதாகிக் கொண்டே போனால், அது ஹெர்னியாவாக இருப்பதற்கான முதல் அறிகுறியாகும். எனவே உங்களுக்கு இம்மாதிரியான தொப்புள் இருந்தால், அதனை அடிக்கடி கவனியுங்கள். அது வளர்கிறதா என்பதை கூர்ந்து நோக்குங்கள்.

சிறிய கட்டியைக் கொண்ட தொப்புள்

சிறிய கட்டியைக் கொண்ட தொப்புள்
சிலருக்கு தொப்புளினுள் சிறிதான ஒரு கட்டி போன்று இருக்கும். இம்மாதிரியான தொப்புள் வடிவத்தைக் கொண்டவர்கள் அடிக்கடி காய்ச்சலால் அவஸ்தைப்படுவதோடு, வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

சுருங்கிய தொப்புள்

சுருங்கிய தொப்புள்
உங்கள் தொப்புள் சுருங்கி இருந்தால், செரிமான பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுவீர்கள். மேலும் இந்த வகை தொப்புள் வடிவத்தைக் கொண்டவர்கள், தங்கள் உடல் எடையிலும் பிரச்சனையை சந்திப்பார்கள்.

கண் அல்லது பாதாம் வடிவ தொப்புள்

கண் அல்லது பாதாம் வடிவ தொப்புள்
கண் அல்லது பாதாம் வடிவில் தொப்புளைக் கொண்டவர்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனையை சந்திக்க நேரிடுவதோடு, தசை மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்.

T அல்லது Y வடிவ தொப்புள்

T அல்லது Y வடிவ தொப்புள்
இந்த வடிவ தொப்புள் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். ஆனால் இந்த வடிவ தொப்புளைக் கொண்டவர்களுக்கு சிறுநீரகம் மற்றும் சரும நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதோடு, அது குழந்தைகளுக்கும் பரவுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதுப் போன்று வேறு…

இதுப் போன்று வேறு…
கண்களின் நிறத்தை வைத்தும் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பது தெரியுமா? அதைத் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்.

இதுப் போன்று வேறு…

இதுப் போன்று வேறு…
நாக்கும் ஒருவரின் உடல் நலத்தைப் பற்றி நமக்கு ஒருசில விஷயங்களைச் சொல்லும். அந்த விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்.