Home காமசூத்ரா திருமணத்திற்கு பின் முதலிரவிற்கு தயாராவது எப்படி ?

திருமணத்திற்கு பின் முதலிரவிற்கு தயாராவது எப்படி ?

47

01வாழ்க்கையில் முதல் அனுபவம் என்றால் மறக்க முடியாத விஷயமாக தான் இருக்கும். அந்த அனுபவம் வெற்றியில் முடிந்தாலும் சரி, தோல்வியில் முடிந்தாலும் சரி, அந்த அனுபவம் நமக்கு என்றும் இனியவையாகவே இருக்கும். முதன் முதல் பள்ளியில் சேர்வதில் இருந்து, முதல் காதல், முதல் முத்தம் என பல விதமான செயல்களை முதல் முறை செய்யும் போது, அந்த அனுபவமே அலாதி தான். இந்த விஷயங்களுக்கே இப்படி என்றால் ஈடுபடுவதில் சந்தோஷத்தையும், சுகத்தையும், உலகத்தையே மறக்க செய்யும் போதையையும் அளிக்கும் முதல் உடலுறவை யாராலும் மறக்க முடியுமா?

முதல் முறை உடலுறவு கொள்வது என்பது உங்களுக்கு கண்டிப்பாக நடுக்கத்தையும் மிரட்டலையும் ஏற்படுத்தும். உங்கள் துணைக்கும் அதுவே முதல் முறை என்றால், இருவருமே ஒரே சூழ்நிலையில் தான் நிற்பீர்கள். இரண்டு பேருக்குமே ஒரு விதமான மன அழுத்தம் ஏற்படும். உங்கள் இரண்டு பேருக்குமே முதல் முறையாக இருந்தாலும் சரி அல்லது ஒருவருக்கு மட்டும் முதல் முறையாக இருந்தாலும் சரி, கீழ்கூறிய எளிய டிப்ஸ்களை பின்பற்றுங்கள். இதனால் உங்களுக்கு உண்டாகும் கவலைகளும், பதற்றங்களும் நீங்கி, இந்த முதல் அனுபவத்தை மிகவும் உற்சாகமுடையதாக மாற்றி, மறக்க முடியாத ஒன்றாகவும் ஆக்கும். பெண்கள் தாங்கள் இதற்கு தயார் என்று சொல்வதற்கு முன், அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். மேலும் புரிந்திட தொடர்ந்து படியுங்கள்……

தயாராக இருக்கும் போது செய்யுங்கள்;உடலுறவு என்பது சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாகும். எப்போது என்பதை எண்ணி அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். நீங்கள் உடன் இருக்க போகும் நபரை பற்றி எண்ணிப் பாருங்கள். உங்கள் இருவருக்கும் சரியாக படும் நேரத்தை தேர்ந்தெடுத்து, இந்த நிகழ்வை சிறப்பு மிக்கதாக மாற்றுங்கள். நீங்கள் உங்கள் துணையும் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டியது முக்கியமாகும். கூடுதலாக, நீங்கள் முடிவு செய்த தேதியிலேயே கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. அது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம், ஆனால் எது நடக்கிறதோ அதன் படி செல்லுங்கள்.

முதலில் பாதுகாப்பு;

இந்த முதல் முறை அனுபவத்தின் மிக முக்கியமானதே அதன் பாதுகாப்பு தான். பாதுகாப்பு மிகவும் கட்டாயமாகும். இதனால் கர்ப்பம் ஆகாமல் பாதுகாப்புடன் இருப்பதோடு STD போன்ற பாலின நோய்களில் இருந்தும் பாதுகாப்போடு இருக்கலாம். பாதுகாப்பு முறையை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம் –

உதாரணங்களுக்கு ஆணுறைகள், பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள். ஆணுறை தான் மிகவும் சிறந்த மற்றும் சுலபமான தேர்வாகும். அதற்கு காரணம் அது கருத்தரித்தல் மற்றும் பாலின நோய்கள் என இரண்டில் இருந்து உங்களை காக்கும். முன்கூட்டியே அதனை வாங்கி கையில் தயாராக வைத்துக் கொள்ளவும். இதனால் கடைசி நிமிடத்தில் ஆணுறை வாங்குவதற்காக அலையத் தேவையில்லை. உங்கள் ஆணுக்கு விறைப்பு ஏற்படுகிற நேரத்தில் தான் ஆணுறையை பயன்படுத்துவீர்கள். இதனால் அந்த நேரம் பார்த்து ஆணுறையை தேட ஆரம்பித்தீர்கள் என்றால் அவ்வளவு தான், அவருக்கு புஸ் என ஆகிவிடும். நீங்களும் அதனால் வருத்தமடைவீர்கள். அதனால் அவரை நம்பாமல் நீங்களே ஆணுறைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இவைகளை வைத்துக் கொள்வதால், நிலைமை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அனைத்து பெண்களுக்கும் இரத்த கசிவு ஏற்படாது;

இந்தியாவில் கன்னி கழியாமல் இருப்பதற்கு ஒரு விளக்கமே வைத்துள்ளனர். அதாவது ஒரு பெண் கன்னித்தன்மை உடையவள் என்றால் அவள் முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்தக்கசிவு ஏற்படுமாம். இது வெறும் கட்டுக்கதையே. முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது எல்லா பெண்களுக்குமே இரத்த கசிவு ஏற்படுவதில்லை. அதற்கு காரணம் கன்னிச்சவ்வு என்பது பெண்ணுறுப்பின் திறப்பின் மீது உள்ள மிகவும் மென்மையான திசுவாகும். ஓடுதல், குதித்தல், சைக்கில் ஓட்டுதல், நீச்சல், உடற்பயிற்சி செய்தல் போன்ற பல விதமான இயல்பான நடவடிக்கைகளால் கூட இந்த கன்னிச்சவ்வு மிக எளிதில் பிரிந்து விடும். சில பெண்களுக்கு இயற்கையாகவே, பிறப்பில் இருந்தே இந்த திசுக்கள் இருப்பதில்லை. அதனால் இதனை கன்னித்தன்மையுடன் முடிச்சு போடாதீர்கள். பெண்களின் கற்பின் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது உடலுறவு கொள்வதற்கு முன்பே வர வேண்டுமே தவிர உடலுறவு கொண்ட பிறகல்ல.

கன்னித்தன்மை துயரங்கள்;

நீங்கள் இருவருமே கற்புடன் இருக்கிறீர்கள் என்றால், ஒரு வித அலங்கோலத்துடன் உடலுறவு சரியாக நடக்க வாய்ப்பில்லாமல் போகலாம். இது கண்டிப்பாக நல்ல அனுபவமாக இருந்தாலும் ஆஹா ஓஹோ என சொல்லும் அளவிற்கு இருக்காது. இரண்டு பேரும் ஒத்துபோய் அதில் ஈடுபடுவதற்கும், உங்கள் துணைக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை தெரிந்து கொள்ள சிறிது காலம் ஆகலாம். அதனால் சூழ்நிலையை எளிதாக்கி கொள்ளுங்கள். அமைதியாக இருந்து ஒருவருக்கொருவர் அனுபவியுங்கள். உடனே உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைய வேண்டும் என நினைக்காதீர்கள். அது நடக்கும் நேரத்தில் நடக்கட்டும், அதற்காக முந்தைய செயல்களை அவதி அவதியென செய்யாதீர்கள்.

வலி என்பது தடையாக இருக்க வேண்டியதில்லை;

முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படுவது இயல்பான ஒன்றே. நாங்கள் ஏற்கனவே சொன்னதை போல் சில நேரம் சற்று இரத்தக் கசிவு இருக்கலாம். ஆனால் வலி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் வலியைப் பற்றிய பதற்றம் நிலைமையை இன்னும் மோசமாக்கும். ஆனால் அந்த வலி என்பது கொஞ்ச நேரத்திற்கு மட்டுமே. சிறிது நேரம் கழித்து அதில் நீங்கள் சுகம் காண ஆரம்பித்து விடுவீர்கள். அதனால் அமைதியாக இருந்து, அந்த தருணத்தை கொண்டாடுங்கள். பலவித காம விளையாட்டுக்களில் சந்தோஷமாக ஈடுபடுங்கள். இது உங்கள் உடலுறவின் சூட்டை அதிகரிப்பதோடு, உங்கள் பெண்ணுறுப்பை வழுவழுப்பாக்கும். இதனால் ஊடுருவல் சுலபமாக நடைபெறும். அதே சமயம் வலியும் இருக்காது. பெண்ணுறுப்பு வறண்டு போய் இருந்தால், வலிமிக்க உடலுறவை கொள்ள வேண்டும்.

பாலுணர்வை ஊட்டும் விளையாட்டு;

பாலுணர்வை ஊட்டும் விளையாட்டு என்பது உடலுறவை போலவே மிகவும் முக்கியமானதாகும். அதனால் அதில் ஈடுபடும் போது சந்தோஷத்தோடு கொண்டாடுங்கள். அடல்ட்ஸ் ஒன்லி உரையாதல், ஸ்பரிசம், முத்தம் என அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களின் எல்லைக்கு தகுந்தவாறு முயற்சித்து பாருங்கள். அதில் உங்கள் துணைக்கு எது பிடிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதேப்போல் உங்களுக்கு எது பிடிக்கிறது என்பதையும் அவரிடம் கூறுங்கள். இதனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வதோடு, உடலுறவுக்கான மனநிலையையும் அவர் பெறுவார். நீங்கள் இருவரும் முதல் முறை உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்றால், பாலுணர்வை ஊட்டும் விளையாட்டுக்களில் ஈடுபடும் போதே அவருக்கு விந்துதள்ளல் ஏற்படலாம். அதனால் வருத்தமடையாதீர்கள், அவருக்கும் குற்ற உணர்வை ஏற்படுத்தாதீர்கள். சிறிது நேர இடைவேளைக்கு பின் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

கேள்விகளும்… விடைகளும்…

இது சுவாரசியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் தலையில் இவைகள் கவலையாக நச்சரித்துக் கொண்டே இருக்கலாம். அவையாவன

‘கூடுதலான படுக்கை விரிப்புகள் வைத்திருக்க வேண்டுமா?’,
‘உடலுறவுக்கு பின் படுக்கை விரிப்பை மாற்ற வேண்டுமா?’,
‘உடலுறவிற்கு பின் இருவரும் குளிக்க வேண்டுமா?’ –

குறிப்பாக நீங்கள் இருவருமே கன்னித்தன்மையுடன் இருந்தால். சரி,

இதோ உங்கள் சந்தேகங்களுக்கான விடைகள்:

படுக்கையில் உடலுறவு கொண்டால், இரத்த கசிவினால் விரிப்பில் அது ஒழுகியிருக்கலாம். அதனால் விரிப்பை மாற்ற வேண்டி வரும். ஒரு வேளை, விரிப்பு அழுக்காகவில்லை என்றால், உடலுறவு கொண்ட பின் அதனை மாற்ற வேண்டியதில்லை.

அதே போல், உடலுறவுக்கு முன் குளிப்பது நல்ல ஐடியாவாகும். குளித்து விட்டு ஆரம்பித்தால் போர்வைக்குள் இருவரும் சூடாவதோடு மட்டுமல்லாது, உங்கள் அந்தரங்க பாகங்களும் சுத்தமாவதால், உடலுறவின் போது நற்பதத்துடன் உணர்வீர்கள். உடலுறவுக்கு பின் நீங்கள் விருப்பப்பட்டால் குளிக்கலாம். ஆனால் இனப்பெருக்க உறுப்பை கண்டிப்பாக வெதுவெதுப்பான நீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதனால் தொற்றுக்கள் ஏதும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.

அதற்கான மனநிலையை ஏற்றிடுங்கள்;

முதல் முறை உடலுறவு என்பது ஒரு கனவுலகம் போல் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் சிலருக்கு அந்த சூழ்நிலை அமைவதில்லை. அதனால் இருப்பதை வைத்து சூழ்நிலையை சிறப்பாக மாற்றுங்கள். இனிமையான காதல் ரசம் சொட்டும் இசையை ஒலிக்க செய்து, உங்கள் மனநிலையை அதிகரிக்க செய்யுங்கள். வாசனை மெழுகுவர்த்திகள் மற்றும் சாக்லெட்களையும் இந்த சூழ்நிலையில் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு அந்த மூடு வருவதற்கு இன்னொரு வழியும் உள்ளது – நீங்கள் இருவரும் உங்களது விருப்பு வெறுப்புகளைப் பற்றி பேசுங்கள். இதன் மூலம் அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களையும் பேசுங்கள். அதேப்போல் பலான படத்தில் நீங்கள் பார்த்ததை வைத்து, உங்கள் நண்பர்களின் அனுபவங்களை வைத்து பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி விடாதீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இதனை வெளிப்படுத்துவார்கள். அதனால் உங்களுக்கென ஒரு வழியை தேர்ந்தெடுத்து, உங்கள் நினைவுகளை பொக்கிஷமாக மாற்றுங்கள். அதனால் முதல் அனுபவம் பெரியளவில் வெற்றியாக அமைய வேண்டும் என்றெல்லாம் எண்ணி கவலைப்படாதீர்கள். அதனை குதூகலுத்துடன் சந்தோஷமான ஒன்றாக மாற்றுங்கள். தயாராக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், வசதியான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்……..!