குழந்தைகள் பிறக்கும் போதே பல திறமைகளுடனும் பிறக்கிறார்கள். பெற்றோர்கள் அவர்கள் எதிர் திறமைசாலியாக உள்ளார் என்பதை அறிந்து அந்த திறமைகளை ஊக்கப்படுத்தி வளர்க்க வேண்டியது நமக்கு மிகவும் அவசியம்.
சில குழந்தைகள் படிப்பில் கவனமின்றி இருக்கும்.
அவர்களின் படிப்பில் கவனத்தை செலுத்த பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும். அதுவும் தாய்மார்கள் அவர்களுடைய செயல்திறனை அதிகரிக்கத் தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொஞ்சம் அதிகம் அக்கறை எடுத்து குழந்தையின் ஆசிரியரிடம் பேசுங்கள். வாரம் ஒருமுறை ஆசிரியரை சந்தித்து அவர்கள் வகுப்பில் எவ்வாறு நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதையும் குழந்தையின் செயல்திறன் எப்படி உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இது பெற்றோர் முதலில் செய்ய வேண்டிய வேலைகளில் இது தான் மிகவும் முக்கியமானது. பள்ளியில் தினமும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி குழந்தையிடம் அடிக்கடி விசாரியுங்கள். அதற்கு கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூறுங்கள். நாள் முழுவதும் படிக்கச் சொல்வதால் மட்டும் உங்கள் குழந்தை நன்றாகப் படிக்கப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதற்குப் பிடித்தமான பிற ஆர்வமூட்டக்கூடிய செயல்களை கண்டறிந்து அவற்றை ஊக்குவிப்பதும், அவர்கள் அதில் ஈடுபடச் செய்வதும் மிகவும் முக்கியமான ஒன்று என்பதை உணருங்கள். தினமும் பள்ளியில் இருந்து வந்தவுடன் படி படி என்று குழந்தைகளை கட்டாயப்படுத்தாதீர்கள். அது குழந்தைகளுக்கு படிப்பில் மீது இருக்கும் கொஞ்ச ஆர்வமும் போய்விடும்.
அவர்கள் விரும்பும் படிப்பை விளையாட்டாக சொல்லி கொடுங்க. பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளை உடனே படி என்று சொல்லாமல் அவர்களுக்கு விருப்பமாக உணவை கொடுங்கள். பிறகு சிறிது நேரம் விளையாட அனுமதியுங்கள். அதன் பின்னர் அவர்களுடன் அன்று பள்ளியில் நடந்த விஷயங்களை பற்றி மனம் விட்டு பேசுங்கள்.
இதனால் அவர்களுக்கு தினமும் பள்ளியில் என்ன நடந்தாலும் அதை தன்தாயிடம் கூறவேண்டும் என்ற எண்ணம் வரும். குழந்தைகளுக்கு பாடத்தை சொல்லி கொடுக்கும் போது அவர்களுக்கு புரியும்படி சொல்லி கொடுங்க. புரியாமல் மனப்பாடம் செய்து படிக்க வேண்டாம் என்பதை சொல்லி கொடுங்க.
குழந்தைகளுடன் தந்தை எல்லா நேரங்களிலும் இருக்க முடியாது. எனவே தாயால் மட்டுமே குழந்தைகளுடன் பழகி அவர்களின் மனதை புரிந்து கொள்ள முடியும்.