Home பெண்கள் தாய்மை நலம் தாயின் உணர்வுகளை குழந்தைக்கு அளிக்கும் திறன் தாய்ப்பாலுக்கு உண்டு

தாயின் உணர்வுகளை குழந்தைக்கு அளிக்கும் திறன் தாய்ப்பாலுக்கு உண்டு

24

குழந்தைக்கு தாய்ப்பால் சத்தான உணவு என்பது அனைவருக்கும் தெரியும். அதில் புரோட்டீன், கால்சியம் சத்துக்கள் உள்ளன. அது குழந்தையின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். அதில் நிறைய நுண் ஊட்ட சத்துக்கள் இருப்பதால் செரிமான தன்மை அதிகம் உள்ளது.

இதனால் குழந்தையின் உடல் நலத்துக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமானது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக தாயின் உணர்வலைகளை குழந்தைகளுக்கும் ஊட்டும் திறன் படைத்தது என்ற புதிய தகவல் தெரிய வந்துள்ளது.

தாய்பாலின் ‘பிரோமோன்’ என்ற ரசாயன சிக்னல் (சமிக்ஞை) உள்ளது. அது தாயிடம் இருந்து குழந்தைக்கு உணர்வலைகளை கடத்துகிறது. மேலும் குழந்தைகளின் உடல் திறன் வளர்ச்சி அடைய வழி வகுக்கிறது. இந்த ஆய்வு குரங்குகளிடம் நடத்தப்பட்ட பிறகு தெரிய வந்தது.