தர்பூசணியை அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும்.
இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.
சருமத்தில் முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்கள் அதிகம் இருந்தால், அதனைப் போக்க தர்பூசணி பெரிதும் உதவியாக இருக்கும்.
அதிலும் தர்பூசணி பழத்தை அரைத்து, அத்துடன் அவகேடோவை மசித்து சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இதனால் பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தில் உள்ள வறட்சி நீங்கி, சுருக்கங்கள் மறையும்.