Home இரகசியகேள்வி-பதில் தம்பத்திய சுகம் தராத கணவனை என்ன செய்வது?

தம்பத்திய சுகம் தராத கணவனை என்ன செய்வது?

28

எனக்கு வயது, 30; திருமணம் ஆகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. கணவருக்கு ஆண்மைக்குறைவு என்பதை , திருமணமான அன்றே தெரிந்து கொண் டேன். அதிலிருந்து, அவர், என்னோடு உறவுகொள்வதில்லை; சுயஇன்பம் செய் து வந்தார். இருந்தும், அவருடனே வாழ்ந் து வந்தேன். ஆனால், அவர் தன்னுடைய இந்த குறை யை தீர்க்க, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், எங்களுக்கு ள் சண்டை அதிகமானது. வீட்டு பெரியவ ர்களுக்கு தெரிந்து, விவாகரத்து செய்ய சொல்லி என்னை வற்புறுத்தினர். ஆனா ல், அவர்மேல் கொண்டுள்ள அன்பு கார ணமாக, ஒப்புக் கொள்ளவில்லை. அவ ரை, ‘கவுன்சிலிங்’ வர சொன்னேன்; மறு த்து விட்டார். தானாக சரியாகும் என்று கூறி,

தன் வழியிலேயே, திருப்தி காண்கிறார். இதனால், என்னுடைய ஒவ்வொரு இரவும் கண்ணீரில் கரைகிறது. அவரிடம் பேசினால், ‘இதுமட்டும் தானா வாழ்க்கை’ என்று கூறுகிறார். இதனிடையில், என்னை செயற்கை முறையில் கருத்தரிக்க கூறினார். முதலில் மறுத்தாலும், பின் ஒரு குழந்தை வந்தால், அவர் என்மேல் அன்பு செலுத்துவார் என்று எண்ணி, சம்மதித்தேன். இப்போது, எனக்கு ஒரு ஆண் குழந்தைஉள்ளது. ஆனால், அவர் மட்டும் மாறவே இல் லை.

தற்போது, நான், அவருக்கு ஒரு வேலைக்காரி மாதிரிதான் உள் ளேன். வீட்டை பராமரித்து, சமைத்து போட்டு, என் மகனை வளர் ப்பது மட்டும் தான் வேலை. எனக்கு என்று எந்த ஆசையும், எதிர் பார்ப்பும் இருக்கக் கூடாது என்பது தான் அவர் ஆணை. இதில், எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். இருந்தும் அவரை விட்டு விலக எனக்கு மனமில்லை. என் தலையெழுத்து, இவ்வளவு தா ன் என்று, மனதை சமாதானப்படுத்தி வாழ துவங்கி விட்டேன். அவருக்கும், எனக்கும் எந்த அன்னியோன்யமும் இல்லை.

இப்போது என் பிரச்னை என்னவென்றால், என் தாம்பத்திய ஆசை யை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொருவரையு ம் பார்க்கும் போதும், என் மனதில் எழும் ஏக்கத்திற்கு அளவே இல்லை. எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனையை கொடுத்தாய் என்று, வேண்டாத தெய்வம் இல்லை. இப்போது இரண்டு ஆண் டுகளாக நானும் அவர் போலவே இன்பம் காண பழகி விட்டேன். இது, என் கோபம், ஏக்கத்தை குறைக்கும் வடிகாலாக இருக்கிற து. வேலைக்கும் சென்று பார்த்தேன். அங்கு மற்ற பெண்கள் அவ ர்கள் மணவாழ்க்கையைப் பற்றி பேசுவதால், என் வேதனை அதிகமாகிறது.

என் பிரச்னைகளை யாரிடமும் சொல்ல முடியாமல், மனதுக்குள் அழுகிறேன். என் கணவரோ… நம் அருகில், ஓர் உயிருள்ள ஜீவன் இருக்கிறது என்ற எண்ணம் இல்லாமல், உறங்குகிறார். என்னை பார்த்தாலே குப்புறப்படுத்து தூங்க ஆரம்பித்து விடுவார். இனி, அவரை மாற்ற முடியாது என்று தீர்மானமாக தெரிந்து விட்டது.

சுய இன்பம் காணும் பழக்கம் சரியா, நான் இதை எப்படி மாற்றிக் கொள்வது, என்னுடைய தாம்பத்திய ஆசைக்கு வடிகால் எது? என் கணவருடன் பேசுவது, கவுன்சிலிங் போவது, அவருக்கு பிடி த்த மாதிரி நடப்பது, பெரியவர்களிடம் யோசனை கேட்பது, கோ விலுக்கு போவது என, இதைத் தவிர, வேறு ஆலோசனை கூறுங் கள் அம்மா. ஏனென்றால், பத்து ஆண்டுகளாக இவை அனைத்து ம் செய்து, நான் தோற்றுவிட்டேன். அவர் மேல் உள்ள அன்பு மட் டும் இன்னும் மாறவில்லை. எனக்கு நிம்மதியாக வாழ வழி சொல்லுங்கள்

பதில்:

உன் கடிதம் கிடைத்தது; இப்பழக்கம் உள்ளவர்கள், ஓரின சேர்க் கையாளர்களைப் போல், அப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவ தால், அவர்களுக்கு தாம்பத்யம் இனிக்காது. சுயபழக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலானோர் ஆண்மை குறைந்தவர்கள் அல் ல.

உன் கணவரை ஒரு நல்ல செக்ஸாலஜிஸ்டிடம் கூட்டிச் சென்று, ஆலோசனை வழங்க சொல்லலாம். அவர் மறுத்தாலும் பிடிவாத மாய், அவரை மருத்துவரிடம் கூட்டிச் செல்வது உன் சாமர்த்தியம். ஆண்மை எழுச்சிக்கு மிகச் சிறந்த மருத்துவம் அலோபதியிலும், சித்தாவிலும், ஹோமியோவிலும் உள்ளன. கவுன்சிலிங் போனா ல், உன் கணவர் நிச்சயமாக இப்பழக்கத்தை மறப்பார்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நீயே கூட, உன் கணவரு க்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுக்கலாம். இப்பழக்கம் உள்ள வர்கள் பெரும்பாலானோர் கற்பனைவாதிகள். மனதிற்கு பிடித்த பேரழகிகளுடன் தாம்பத்யம் மேற்கொள்வது போல், கற்பனை செ ய்து, இதில் ஈடுபடுவர். இதே கற்பனையை, தாம்பத்யம் செய்வதி ல் திருப்பி விடலாம்.

செயற்கை கருத்தரிப்பு மூலம், உன் கணவரின் குழந்தைக்கு தாயாகி உள்ளாய். தாம்பத்ய சுகம் தராத கணவனை மன்னித்து, அவன் மேல் பாசத்தை பொழியும் உனக்கு உண்மையில் பெரிய மனசு. கணவனின் குறையை காரணம் காட்டி, திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபடாமல் இருப்பது, உன் மனக்கட்டுப்பாட்டை காட்டுகிறது.

மகளே… கடந்த இரண்டு ஆண்டுகளாக உனக்கும் இப்பழக்கம் வந்து விட்டதாக எழுதியிருக்கிறாய். இப்பழக்கத்தால், அவயத்தி ல் காயம் அல்லது நோய் தொற்று ஏற்படக்கூடும். மற்றபடி, இதில் பெரிய தப்பு ஏதுமில்லை. இப்பழக்கத்தால், கணவரின் மேல் கோ பம் குறைந்து, உனக்குள் ஒரு அமைதி ஏற்படுவதாக எழுதியிருக் கிறாய். இது ஒரு தற்காலிக நிவாரணம் தான்.

ஆனால், ஒன்றை மறந்து விடாதே… கடவுள் நம் அவயங்கள் ஒவ் வொன்றயும், வெவ்வேறு செயல்களை செய்வதற்காகவே படைத் திருக்கிறார். அதை நாம் நம் விருப்பத்திற்கு மாற்ற நினைத்து, இயற்கைக்கு புறம்பாக நடப்பது, மேலும் பிரச்னைக்கு தான் வழி வகுக்கும்.

அதனால், உன் கணவனிடம் சண்டையிடுவதற்கு பதில், சமாதான கொடியை தூக்கு. சண்டையும், அழுகையும் உன் பிரச்னைக்கு தீர்வாகி விடாது. அதற்கு பதில், உன் கணவரிடம் நட்பு கொண்டா டு; அவர் ரசனை அறிந்து பேச்சுக் கொடு, அது எதைப் பற்றியதாக வும் இருக்கட்டும்.

உன்னிடம் எல்லாவற்றையும் மனம் விட்டு பேசும் அளவுக்கு முத லில் அவர் மனதில் இடம் பிடி. அலுவலகம் முடிந்ததும் சந்தோஷ மாக வீட்டிற்கு ஓடிவரும் மனநிலைக்கு உன் கணவரை கொண்டு வா. பின், உன் தேவைகளை, கஷ்டங்களை, மிக மென்மையாக எடுத்துக் கூறி, மருத்துவரிடமோ, கவுன்சிலிங்கோ அழைத்துச் செல்.

மருத்துவம் மேற்கொண்ட பின், நீயும், உன் கணவனும் இரண்டா வது தேனிலவுக்கு செல்ல, ‘அட்வான்ஸ்’ வாழ்த்துகள்.