Home உறவு-காதல் தம்பதிகள் சண்டையால் பிரிந்து இருக்கும் போது செய்யக்கூடியவை

தம்பதிகள் சண்டையால் பிரிந்து இருக்கும் போது செய்யக்கூடியவை

18

kudummmpam-680x365எந்த ஒரு உறவுமுறைகளை எடுத்தாலும், அங்கு சண்டைகள் வருவது சாதாரணம் தான். அதிலும் காதலிப்பவர்களோ அல்லது திருமணமானவர்களாகவோ இருந்தால், அங்கு நிச்சயம் அடிக்கடி இருவருக்கிடையே சண்டைகள் ஏற்படும். இத்தகைய சண்டைகளானது, எவ்வளவு காதல் உள்ளதோ, அந்த அளவில் சண்டைகளும் இருக்கும்.

ஏனெனில் “எங்கு காதல் அதிகம் இருக்கிறதோ, அங்கு தான் கோபமும், குணமும் அதிகம் இருக்கும்” என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். எனவே காதலர்களோ அல்லது திருமணமாவர்களோ சண்டை போட்டாலும், அப்போது ஒரு சிறிய ப்ரேக் எடுப்பது ஒரு நல்ல பலனைத் தரும். ஏனென்றால், சண்டைகள் ஏற்படுவதற்கு பெரும் காரணம், ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொண்டும், சில சமயங்களில் புரிந்து கொள்ளாததாலேயே ஆகும்.

மேலும் செய்த தவறை உணர்ந்து கொள்ளாமல் இருப்பதும் சண்டைக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, ஒருவர் சிறு தவறு செய்துவிட்டு அதனை மற்றவர் சுட்டிக் கூறும் போது, தவறை ஒப்புக் கொள்ளாமல்,அந்த நேரத்தில் ஏற்படும் கோபத்தால், சொல்லக்கூடாத வார்த்தைகளை தெரியாமல் சொல்லிவிட்டு, பின் இருவரும் நாள் கணக்கில் பேசிக் கொள்ளாமல் இருப்பார்கள். இந்த மாதிரியான சண்டைகள் தான், தற்போது பெரும்பாலானோரின் வாழ்க்கையில் நிலவுகிறது.

இதனால் கோபத்தால் ஏற்படும் சிறு சண்டைகளால், பலருக்கு விவாகரத்து கூட ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மாதிரியான சூழ்நிலையைத் தவிர்க்க இருவரும் சிறிது நாட்கள் பிரிந்து இருப்பது, காதல் வாழ்க்கையை வளமாக வைத்துக் கொள்ளும். மேலும் இருவரும் பிரிந்து இருக்கும் போது, செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று சில உள்ளன. அவை:

* பிரிந்து இருக்கும் போது, ஒருவரை ஒருவர் எந்த காரணம் கொண்டும் சந்திக்கவோ, போனில் பேசவோ கூடாது. இதனால் எந்த நேரத்திலும் சண்டையானது பெரியதாக மாறலாம்.

* குறிப்பாக, யாரிடமும் இந்த பிரச்சனையைப் பற்றி பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் அவ்வாறு பகிரும் போது,மற்றவர்கள் அவர்களது கருத்துக்களை சொல்ல பின், அதுவே இருவரையும் பிரித்துவிடும்.

பிரிந்து இருப்பதால் ஏற்படும் நன்மைகள்:

* பிரிந்து இருக்கும் போது தான், ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக தவறு யார் செய்தார்களோ, அதை பிரிந்திருக்கும் காலத்தில் உணர முடியும்.

* மேலும் இந்த பிரிவு காலங்களில் இருவருக்கும் இடையில் காதலானது அதிகம் பெருக்கெடுக்கும். ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருக்கும். பின் என்ன, கோபம், சண்டைகள் அனைத்தும் நீங்கி,இருவரும் அமைதியான காதல் வாழ்க்கையை வாழலாம்.