Home சமையல் குறிப்புகள் தக்காளி பட்டாணி சாதம்

தக்காளி பட்டாணி சாதம்

18

994322402_d8b556f45cதேவையான பொருட்கள் :

உதிராக வடித்த சாதம் – 1 கப்,
பச்சைப்பட்டாணி – அரை கப்,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி – 4,
பச்சை மிளகாய் – 2,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுந்து – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்,
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை,
உப்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 இணுக்கு,
கொத்தமல்லித் தழை – 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது.

செய்முறை:-

* தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக அரியவும்.

* பச்சை மிளகாயை இரண்டாக நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.

* பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்புப் போட்டுச் சிவந்ததும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைப்பட்டாணி தக்காளியைப் போட்டு வதக்கவும்.

* வதங்கியதும் உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார்பொடி சேர்க்கவும்.

* நன்கு சுருள வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி ஆறவைத்து உதிராக வடித்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி வைக்கவும்.

* சுவையான தக்காளி பட்டாணி சாதம் ரெடி.