Home சமையல் குறிப்புகள் சோயா பருப்பு உருண்டை பிரியாணி

சோயா பருப்பு உருண்டை பிரியாணி

20

20150322_141204தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 200 கிராம்

மீல் மேக்கர் – 8

கடலைப் பருப்பு – 50கி

துவரம் பருப்பு – 50கி

மிளகாய் – 5

இஞ்சி – சிறு துண்டு

சோம்பு – சிறிது

உப்பு – தேவைக்கு

பெருங்காயம் – தேவைக்கு

வெங்காயம் பொடியாக நறுக்கியது – 2

தக்காளி – 1 நறுக்கியது

கேரட் – 1

உருளைக் கிழங்கு – 1 அ 2

பூண்டு பல் – 8

பச்சைமிளகாய் -2

தயிர் – சிறிது

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

மிளகாய்த தூள் – 1ஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1ஸ்பூன்

எண்ணை ,நெய் – தேவைக்கு

தாளிக்க

ஏலம்,பட்டை,லவங்கம்,பிரியாணி இலை,முந்திரி,கொத்தமல்லி,புதினா இலைகள்

தயார் செய்யும் முறை:
முதலில் மீல் மேக்கரை கொதி நீரில் ஊறவிடவும்.கடலைப் பருப்பு,துவரம் பருப்பு,மிளகாய் இவற்றை ஊற வைத்து மீல் மேக்கருடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.பருப்பு உருண்டைகளாக உருட்டி, எண்ணையில் பொரிக்கவும். காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும்.கொஞ்சம் வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் இவற்றை அரைக்கவும்.பாசுமதி அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும். வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை,லவங்கம்,ஏலம்,பிரியாணி இலை முந்திரி என ஒவ்வொன்றாய் தாளித்து ,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,தக்காளி அரைத்த விழுதை சேர்த்து வதக்கி,காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.பின் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலாத் தூள் உப்பு சேர்க்கவும்.தயிர் சேர்க்கவும்.பாசுமதி அரிசியை உதிரி உதிரியாக சாதம் வடித்து ஆறவிடவும். காய்கறிகள் வதங்கியவுடன் பருப்புருண்யைகளை தேவைக்கு சேர்த்து சாதத்தை சேர்த்து கிளறி ,முந்திரி ,புதினா கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.பருப்புருண்டை பிரியாணி ரெடி.