பருவம் துளிர்விட ஆரம்பித்ததும் இளைஞர்கள் மனம் விரும்பி செய்கிற முதல் காரியம் ஆண் பெண்ணை சைட் அடிப்பதும் பெண் ஆணை சைட் அடிப்பதும் தான்.
பொதுவாக திருமணம் செய்து கொள்வதற்குத் தான் ஆணோ பெண்ணோ தனக்கு வருகிற வாழ்க்கைத்துணை இப்படி இருக்க வேண்டும். இவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என பல எதிர்பார்ப்புகளை வைத்திருப்பார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் கல்யாணத்துக்காக கூட அல்ல, தாங்கள் சைட் அடிப்பதற்கு கூட சில தகுதிகள் இருக்க வேண்டுமென இரு தரப்பினருமே சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள்.
பெண் தான் சைட் அடிக்க வேண்டுமென நினைக்கிற ஆண்கள்
எப்போதும் பெண்கள் தான் அதிகம் பேசுவார்கள். ஆனால் பெண்களுக்கோ தங்களை விட அதிகமாக வழவழவென்று நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்கிற ஆண்களை மிகப்பிடிக்கிறது.
செருப்பு அணியும் ஆண்களுக்கு பொதுவாகவு பர்சனாலிட்டி குறைவு என பெண்கள் கருதுகிறார்கள். ஆண்கள் ஷூ போட்டுக் கொள்ள வேண்டும். அதிலும் கட்டாயமாக தான் சைட் அடிக்கும் ஆண் செருப்பு போட்டுக் கொண்டு வெளியில் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
அதிகம் படிக்காவிட்டாலும் கூடு பரவாயில்லை. வெளியில் நன்கு படித்தவர் புால தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும். அதற்கேற்ற பர்சனாலிட்டியுடன் இருக்க வேண்டும்.
ஹீரோ மாதிரி ஃபிட்டாக இருக்க வேண்டும். மேன்லியாக இருக்க வேண்டும்.
அழகாக ட்ரிம் செய்யப்பட்ட தாடி வைத்திருக்கும் ஆண்களே பெண்களை மிக அதிகமாகக் கவர்கிறார்கள்.
தாடி, மீசை, முடி அதிகமாக இருக்க வேண்டும். நல்ல உயரமாக இருக்க வேண்டும்.
வெள்ளைத்தோல் இருக்கிற ஆண்களை விட சாக்லேட் பிரௌன் கலரில் இருக்கிற பையனைத் தான் பெண்கள் சைட் அடிக்க விரும்புகிறார்கள்.
அம்மா சொல் பேச்சு கேட்கிற பையன் அடுத்த பெண்களின் பேச்சையும் கேட்பார்கள் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.
பெண்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
இப்படி அடிக்கிக் கொண்டே போகிறார்கள் பெண்கள்.
இதே ஆண்கள் எந்த மாதிரி பெண்களை சைட் அடிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஆண் தான் சைட் அடிக்க வேண்டுமென நினைக்கும் பெண்கள்
பெண்கள் ரொம்ப ஒல்லியாக இல்லாமல் கொஞ்சம் ஜப்பியாக கொழுகொழுவென இருந்தால், அதிலும் கொஞ்சம் கலர் அதிகமாக இருக்கும் பெண்களை மிக அதிகமாகப் பிடித்துப் போகிறது.
முடி நிறைய இருக்கும் பெண்கள் மீது ஆண்களின் பார்வை தானாகச் செல்கிறது.
வெள்ளைநிறத்தில் இருக்கும் பெண்கள் அதிகமாக மேக்கப் போட்டால் தான் அழகாகத் தெரிவார்கள். ஆனால் மாநிறத்தில் உள்ள பெண்களுக்கு பெரிதாக மேக்கப் தேவையில்லை. இயற்கையாகவே அவர்களுக்குள் ஏதோ ஒரு அழகு இருக்கிறது என்று ஆண்கள் நினைக்கிறார்கள்.
பெண்களுக்கு பார்த்ததும் கவர்ந்திழுக்கும் படி, கொஞ்சம் கவர்ச்சியான கண்கள் வேண்டுமென ஆண்கள் நினைக்கிறார்கள்.