Home சூடான செய்திகள் செக்ஸ் வைத்துக்கொள்ள சரியான நேரம் -அதிகாலை 5 :48 தானாம் : ஆய்வில் தகவல்

செக்ஸ் வைத்துக்கொள்ள சரியான நேரம் -அதிகாலை 5 :48 தானாம் : ஆய்வில் தகவல்

23

120200636-early-morning-sex-3நம்ம ஊர்ல எல்லாத்துக்கும் தனியா ஒரு நேரம் குறிப்பார்கள். முதலிரவுக்குன்னா கேட்கவே வேண்டாம். உண்மையில் அந்த மேட்டருக்கு என்று தனியாக நேரம் எதுவும் இருக்கா என்பது இன்று வரை புரியாத புதிர். இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நம் உடல் கடிகாரத்தின் படி உடலுறுவு வைத்துக்கொள்ள காலை 5 : 48 தான் சரியான நேரம் என்று தெரியவந்திருக்கிறது.

என்னது? அப்போ நைட் துõங்கிட்டு காலையில அலார்ம் வச்சு…ஆரம்பிக்கிறதான்னு பலருக்கும் கோபம் கொப்பளிக்கலாம். நாங்க என்னங்க பண்றது..அறிவியல் முடிவுகள் அப்படித்தான் சொல்றதாம். மேட்டர் இதுதாங்க..

நம் உடலில் தனியாக ஒரு நேர கடிகாரம் இருக்கிறதாம். அன்றாட
தேவைகள், உணர்ச்சிகள் மற்றும் திறன்களுக்கு ஏற்ப பணி செய்ய அந்த கடிகாரம் முக்கிய பங்கு வகிக்கிறதாம். சிர்காடியன் ரிதம்ஸ் எனப்படும் உடல் சீதோஷ்ண நிலை, ஹார்மோன் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் நமது உடல் மற்றும் சக்தி அளவுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ரிதம்களின் அடிப்படையில் நமது பாடி கிளாக் எனப்படும் உடல் கடிகாரம் இயங்குகிறதாம். அதன்படி ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஒவ்வொரு நேரம் உகந்தது என்பதை சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர் ஆராய்சச்சியாளர்கள். குறிப்பாக எப்போது துõங்க வேண்டும், சாப்பிட வேண்டும், எதையாவது புதிதாக கற்றுக்கொள்வதற்கான நேரம் என தனித்தனியாக அது அதற்கு நேரம் உள்ளதாம். அந்த வரிசையில், உடலுறவு வைத்துக்கொள்ள அதிகாலை 5 : 48 தான் மிக சரியான நேரமாம். உடல் கடிகாரத்தின் இந்த நேரத்தில் உடலுறவு மேற்கொண்டால் உடல் இயக்கம் மிக சிறந்ததாக இருக்குமாம். இதனால் அதன் இன்ப எல்லைகள் மேலும் அதிகமாக இருக்கும் என்ற ரீதியில் ஆராய்சசி முடிவுகள் எதிரொலிக்குதுங்க..

பள்ளிப்படிப்புக்கு தான் அதிகாலையில எழுந்திருக்க முடியல. அட்லீஸ்ட் பள்ளியறை பாடத்துக்காவது எந்திரிக்கலாம்னு மைண்ட் வாய்ஸ் கேட்குது…