Home சூடான செய்திகள் செக்ஸ் மெஷின்ஸ் – சர்ச்சைக்குரிய ஆய்வு..!

செக்ஸ் மெஷின்ஸ் – சர்ச்சைக்குரிய ஆய்வு..!

22

x01-1464765882-robot-sexual-humanoid-partners-dolls.jpg.pagespeed.ic.fB4pFcPYAbமிகப்பெரிய அளவிலான தொழில்நுட்ப உந்துதலில் செயல்பட்டு கொண்டிருக்கும் நாம் அனைவரும், விரைவில் – எதிர்காலத்தில் தொழிநுட்பம் மூலம் தான் இயக்கப்பட இருக்கிறோம் என்கிறது ஒரு சர்ச்சைக்குரிய ஆய்வு..! அதாவது, எதிர்காலத்தில் செக்ஸ் இயந்திரங்கள் தலை தூக்கும் என்கிறது இந்த ஆய்வு..!

புதிய முகம் : அதாவது, செக்ஸ் இயந்திரங்கள் தான் எதிர்கால பாலியல் தொழிலின் புதிய முகமாக இருக்க முடியும் என்றும், அவ்வாறாக ரோபோட்கள் தான் எதிர்கால பாலியல் தொழிலாளர்களாக செயல்படும் என்கிறது நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்று..!

குற்ற உணர்ச்சியற்ற : இதன் மூலம் சட்டப்பூர்வமான பாலியல் தொழில் நடத்தப்படும் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் சிவப்பு விளக்கு பகுதியில் (Amsterdam) மரியாதைக்குரிய ‘குற்ற உணர்ச்சியற்ற’ பாலியல் தொழில் ஆங்கு நடைபெறும் என்றும்வல்லுனர்கள்நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆய்வு : 2050-ஆம் ஆண்டிற்குள், ஆம்ஸ்டர்டாம் சிவப்பு விளக்கு பகுதிகள் முழுக்க ரோபோக்கள் தான் பாலியல் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இயன் யோமன் மற்றும் மைக்கேல் மார்ஸ் : இந்த ஆய்வை நிகழ்த்தியது வெலிங்டன் பல்கலைக்கழகத்தின் எதிர்காலவியலாளர் ஆன இயன் யோமன் மற்றும் பாலியல் ஆய்வாளரான மைக்கேல் மார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

யுப்-யும் பகுதி : 2008-ஆம் ஆண்டு மூடப்பட்ட ஆம்ஸ்டர்டாமின் முந்தைய சிவப்பு விளக்கு பகுதியான யுப்-யும் பகுதியை வைத்து தான் இந்த ஆய்விற்கான அனுமானங்களானது உருவாக்கம் பெற்றுள்ளது.

உரிமம் : ஆவண தகவலின் கீழ், நகர சபை உரிமம் பெற்று இயங்கிய மூடப்பட்ட யுப்-யும் சிவப்பு பகுதிக்கான நுழைவு கட்டணமே 10,000 டாலர்களாம்.

கடத்தல் : இதனையெல்லாம் ஆய்விற்க்கு உட்படுத்தி வருங்கால பாலியல் தொழில் எப்படி அமைய வேண்டும் என்பதயும், 2040-களில் உள்ள பாலியல் தொழிலுக்காக நிகழ்த்தப்படும் கடத்தல்கள் ஆகியவைகளை மனதிற்க் கொண்டு இயன் யோமன்மற்றும் மைக்கேல் மார்ஸ் இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளனர்.

சுகாதார பாதிப்பு : உடன் வளர்ந்து வரும் சுகாதார பாதிப்புகளான பால்வினை நோய்கள், முக்கியமாக எய்ட்ஸ் போன்ற நோய்கள் போன்றவைகளை பற்றியும் இந்த ஆய்வில் கணிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

உடல் வடிவங்கள் : பாலியல் தொழிலில் மனிதர்களை ஈடுபடுத்தாமல் இருக்க உருவாக்கப்படும் ரோபோட்க்களில் அனைத்து இனங்கள், உடல் வடிவங்கள், வயது , மொழிகள் மற்றும் பாலியல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்று பாலியல் தொழிலாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

உத்தரவாதம் : உடன் ஆய்வின்கீழ் செக்ஸ் மெஷின்கள் / ரோபோ பாலியல் தொழிலாளர்கள் – நுகர்வோருக்கு எந்த விதமான பாலியல் நோய்கள் பரவாத வண்ணம் உத்தரவாதம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.