Home பாலியல் செக்ஸ் உறவில் போதுவாக தோன்றும் சந்தேகங்கள்..!!(Over 18 only)

செக்ஸ் உறவில் போதுவாக தோன்றும் சந்தேகங்கள்..!!(Over 18 only)

44

maxresdefault1-300x152எந்த விஷயமாக இருந்தாலும் அதில் சில சந்தேகங்கள், குழப்பங்கள், கேள்விகள் எழாமல் இருக்காது. தாம்பத்யமும் அதற்கு விதி விலக்கல்ல. உண்மையில் தாம்பத்யம், செக்ஸ் உறவுகள் குறித்துத்தான் ஏகப்பட்ட சந்தேகங்கள் பலருக்கும் எழுகிறதாம், நிபுணர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கும், உரியவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவதற்கும் பெரும்பாலானவர்கள் முன்வருவதில்லையாம். தாம்பத்யம், செக்ஸ் உறவு தொடர்பான சந்தேகங்கள் என்னென்ன எழுகின்றன என்பது குறித்து ஒரு சர்வே நடத்தியுள்ளனர்- வழக்கம் போல வெளிநாட்டில்தான். அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தனவாம்.

இதுதொடர்பான சர்வேயை பெண்களிடம் மட்டும் நடத்தியுள்ளனர். உங்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் சந்தேகங்கள் என்ன என்று பட்டியலிடச் சொன்னபோது அவர்கள் சொன்னது இதுதானாம்…
என் கணவர் உறவின்போது ரொம்ப வெட்கப்படுகிறார். அவரை அதிலிருந்து விடுவித்து, ஆவேசமான ஆசாமியாக மாற்ற என்ன செய்வது என்று பல பெண்கள் கேட்டார்களாம்.
சில பெண்களுக்கு விந்தனு குறித்த அலர்ஜி இருப்பது தெரிய வந்ததாம். அதாவது விந்தனு உள்ளே செல்லும்போது எனக்கு ஏதாவது ஆகி விடுமா. ஒரு வேளை கருத்தரிக்காமல் போனால், உள்ளே போன விந்தனுவால் எனது உடல் நலனுக்கு பாதிப்பு வருமா என்று அவர்கள் கேட்டார்களாம். விந்தனு உள்ளே போய் என்ன செய்கிறது, என்ன நடக்கிறது என்ற அடிப்படை விழிப்புணர்வு இவர்களுக்கு இல்லை என்பதை இந்த சந்தேகம் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
சிலருக்கு கிளைமேக்ஸ் எனப்படும் உச்சம் அடைவதில் சிரமம் ஏற்படுவது குறித்த சரியான புரிந்துணர்வு இல்லையாம். இது மன ரீதியான பிரச்சினையா அல்லது எனது உடல் ரீதியான பிரச்சினையா என்று அவர்கள் கேட்டார்களாம்.
சில பெண்கள், நான் கர்ப்பம் தரித்தால் தொடர்ந்து உறவு வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்களாம்.
சிலருக்கு ஓரல் செக்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் எனது கணவருக்குப் பிடித்திருக்கிறது. அதனால் எனக்கு ஏதாவது பாதிப்பு வருமா என்று கேட்டார்களாம்.
சிலருக்கு வைப்ரேட்டர் குறித்து சந்தேகம் இருந்ததாம். அதாவது வைப்ரேட்டர்களை நான் விரும்பவில்லை. ஆனால் அதே எபக்ட்டுடன் கூடிய வேறு ஏதாவது செக்ஸ் பொம்மைகள் இருக்கிறதா என்று கேட்டார்களாம்.
என் கணவருக்கு உடல் பருமன் கூடி விட்டது. அவரால் முன்பு போல உணர்ச்சிகரமாக ஈடுபட முடிவதில்லை. பூனை போல ஆகி விட்ட அவரை மீண்டும் புலிப் பாண்டியாக மாற்ற நான் என்ன செய்ய வேண்டும் என்று சில பெண்கள் கவலையுடன் கேட்டார்களாம்.

எனது கணவரின் ஆண் குறி சற்றே வளைந்து காணப்படுகிறது. இதனால் அவரால் செக்ஸ் உறவில் சுமூகமாக ஈடுபட முடியவில்லை. அதை சரியாக்க என்ன செய்யலாம் என்று சிலர் கேட்டார்களாம்.
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டால் அல்லது அது தொடர்பான மாத்திரைகளை சாப்பிட்டால் செக்ஸ் உறவில் சகஜமாக ஈடுபட முடியாதாமே என்று சிலர் கேட்டார்களாம்.
ஆண் குறியின் அளவைப் பொறுத்துதான் செக்ஸ் உறவின் இன்பம் இருக்கும் என்கிறார்களே, அப்படியா என்று சிலர் அப்பாவியாக கேட்டார்களாம்.
செக்ஸ் உறவை எப்போதெல்லாம் மேற்கொள்ளலாம். அடிக்கடி மேற்கொண்டால் உடலுக்குப் பாதிப்பு வருமா என்றும் சிலர் கேட்டார்களாம்.

எனக்குக் கல்யாணமாகி சந்தோஷமாகததான் இருக்கிறேன். ஆனாலும் என்னுடன் காலேஜில் படித்த ஒருவன் அடிக்கடி எனது கனவில் வந்து இம்சிக்கிறான். நான் நல்லவளா, கெட்டவளா என்று சிலர் நாயகன் கமல் கணக்கில் கேட்டார்களாம்.
எனது கணவர் ஸ்லிம்மாக இருப்பார். நான் ரொம்ப குண்டடித்து விட்டேன். ஆனாலும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் அவர் மீது நான் படுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதெல்லாம் சரிப்பட்டு வருமா என்று சிலர் கவலையுடன் கேட்டார்களாம்.
என் வீட்டுக்காரருக்கு செக்ஸ் என்றால் உயிர். அதற்காக அடிக்கடி அவர் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியே இருந்தால் மற்ற வேலைகளை எப்படிக் கவனிப்பது. இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை சிலர் அலுத்துக் கொண்டார்களாம்.
எனக்கு எது சரியான குழந்தைக் கட்டுப்பாட்டு முறை என்பது தெரியவில்லை. ஏதாவது ஐடியா கொடுங்களேன் என்று சிலர் கேட்டார்களாம்.
செக்ஸே இல்லாத வாழ்க்கை சாத்தியமா என்று சிலர் சீரியஸாகவே கேட்டுள்ளனர்.
எனக்கு அடிக்கடி டென்ஷனாகி விடுகிறது. இதனால் செக்ஸ் உறவில் நாட்டம் போவதில்லை. என்ன செய்வது என்று சிலர் யோசனை கேட்டுள்ளனர்.
எனது கணவருக்கு என்னை அனுபவிப்பதை விட சுய இன்பத்தில்தான் அதிக நாட்டம் இருக்கிறது. ஏன் இவர் இப்படி இருக்கிறார் என்பது சில பெண்களின் கேள்வி.
நான் வைப்ரேட்டேர் பயன்படுத்துவதைப் பார்த்து எனது கணவர் கிண்டலடிக்கிறார். அவருக்கு எப்படிப் ‘புரிய’ வைப்பது என்று சிலர் கேட்டுள்ளனர்.
டெய்லி ஒரே மாதிரியா ‘சாப்பிட்டுப்’ போரடிச்சுப் போச்சு, புதுசா ஏதாவது இருந்தா சொல்லுங்களேன் என்று சிலர் யோசனை கேட்டனராம்.

என் வீட்டுக்காரர் எப்பவுமே ‘சுருக்காக’ முடித்துக் கொள்கிறார். நீண்ட நேரம் உறவில் ஈடுபடுவது எப்படி என்பதை அவருக்கு எப்படிப் புரிய வைப்பது என்று சிலர் கேட்டனராம்.
அவருக்கு ஓரல் செக்ஸ் செய்தால்தான் உச்சம் வருகிறது. இயற்கையாக அவரை எப்படி உச்சத்தை எட்ட வைப்பது என்று சொல்லுங்களேன் என்பது சில பெண்களின் கேள்வியாக இருந்திருக்கிறது.
என் வீட்டுக்காரருக்கு ஆண்குறி மிகவும் சிறிதாக இருக்கிறது. அதை பெரிதுபடுத்த முடியாதே. எனவே அவருக்கேற்ற பொசிஷன் என்ன என்பது குறித்து ஏதாவது ஆலோசனை தர முடியுமா என்று சிலர் கேட்டுள்ளனர்.
வர வர என் வீட்டுக்காரரை எனக்குப் பிடிக்கவே இல்லை, ஆனால் அவருக்குத் துரோகம் நினைக்க என்னால் முடியவும் இல்லை. நான் என்ன பண்ணட்டும் என்று சிலர் திகிலடிக்க வைத்துள்ளனர்.
செக்ஸ் உறவின்போது சந்தோஷத்தை விட வலிதான் எனக்கு அதிகம் உள்ளது. எங்கு தப்பு உள்ளது என்று சிலர் கேட்டுள்ளனர்.

இப்படி ஏகப்பட்ட கேள்விகளையும், சந்தேகங்களையும், யோசனைகளையும், ஆலோசனைகளையும் அந்தப் பெண்கள் கேட்டுள்ளனராம்.

இதுகுறித்து சர்வே நடத்தியவர்கள் கூறுகையில், உலக அளவில் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, செக்ஸ் உறவு குறித்து நிறைய சந்தேகங்களுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் முறையான மருத்துவர்கள், மருத்துவ ஆலோசகர்களை அணுகி தெளிவு பெறுகின்றனர். சிலர் புத்தகங்கள், இன்டர்நெட்டில் பார்த்துப் படித்துப் புரிந்து கொள்கின்றனர். பலர் இதுகுறித்து யாரிடமும் எதுவும் பேசாமல் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இதுபோன்றவற்றை மனதுக்குள்ளேயே வைத்திருந்து குழம்பிக் கொண்டிருப்பது அவர்களது இயல்பான செக்ஸ் வாழ்க்கைக்கு வேட்டு வைத்து விடும். முறையான, சரியான ஆலோசகர்கள் அல்லது ஆலோசனையை அவர்கள் நாடி தெளிவு பெறுவதே இல்லறத்திற்கு இனியது என்கிறார்கள்.