Home சமையல் குறிப்புகள் சூப்பரான சுவரொட்டி / மண்ணீரல் ஃபிரை

சூப்பரான சுவரொட்டி / மண்ணீரல் ஃபிரை

45

தேவையான பொருட்கள் :

சுவரொட்டி / மண்ணீரல் – 2
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 2
[பாட்டி மசாலா] மிளகு தூள் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மண்ணீரல் / சுவரொட்டியை நன்றாக கழுவி கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கழுவிய மண்ணீரல் / சுவரொட்டியை குக்கரில் இரண்டு விசிலுக்கு வேகவைத்துக் கொள்ளவும்.

வெந்ததும் சிறிது ஆறின பிறகு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் மண்ணீரல் / சுவரொட்டியை போட்டு பத்து நிமிடத்திற்க்கு வறுக்கவும்.

அடுத்து அதில் [பாட்டி மசாலா] மிளகு தூள், உப்பு, கொத்தமல்லி தழை தூவி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கி பரிமாறவும்.