Home பாலியல் சுய இன்பத்திற்குப் பிறகு களைப்ப ?

சுய இன்பத்திற்குப் பிறகு களைப்ப ?

29

379df3145eவிந்து என்பது மிகச் சிறிய அளவில் (150 மி.கிராம் அளவு) சர்க்கரை சத்துள்ள, மூக்குச் சளி போன்ற ஒரு திரவம் தான். அது ஆண் உயிரணுக்களுக்குப் போதுமா ன சத்தே தவிர இதனால் உடலுக்கு சக்தி இழப்பு என்று எதுவும் கிடையாது.
சுய இன்பத்திற்குப் பிறகு உடல் களைப்புக்கு காரணம் என்னவென்றால், பாலுணர்வு என்பது குறி மலரின் வாயிலாக உடலில் ஏற்படும் ஒருவித இன்பப்பரப்புதான். அப்பொழுது இரத்தஓட்டம் அதிகமாகி, உடல் தசைகளும், நரம்பு களும் முறுக்கேறுகின்றன. விந்து வெளியேறும் பொழுது, ஆண் குறி முனையில் அழுத்தம் ஏற்பட்டு, நரம் புகளில் இன்பத்துடிபபு ஏற்படுகிறது. இதுவே உச்ச இன்பம் என்பதாகும். பிறகு, உடல் சாதாரண நிலைக்கு வருகிறது.
இப்பொழுது ஏற்படும் உடல் தளர்ச்சியும், மன அமைதியும், ஒரு விதக் களைப்பு உணர்வைக் கொடுக்கிறது. தூக்க உணர்வை ஏற் படுத்துகிறது. இதுவரை ஆட்டிப் படைத்த பாலுணர்வுக் கற்பனைகள் தற்காலிகமாக மறைகிறது.
இந்த உடல் சோர்வு, நீங்கள் சாதாரண மாக விளையாடி விட்டு வந்த பிறகு ஏற்படும் உடல் சோர்வு போலத்தான். இதில் ஏற்படும் சக்தி விரயம், விளையாட்டில் ஏற்படும் சக்தி விரயத்தை விட குறைவுதான். ஆனால், பெரும்பாலோர் குற்ற உணர்வினால் மன ச்சோர்வு அடைந்து, அதன் மூலமாக உடல் சோர்வை அடைகி றார்கள், அவ்வளவுதான்.