Home பெண்கள் தாய்மை நலம் சுகப்பிரசவம் ஆக பாட்டி வைத்தியம்

சுகப்பிரசவம் ஆக பாட்டி வைத்தியம்

74

Paradiseதாய்மைப் அடையும் பெண்கள் ஒவ்வொரு குழந்தையை பிரசவிக்கும் போதும் மறு பிறவி எடுப்பதைப் போன்றது என்று சொல்வார்கள். பிரசவ வேதனை, குழந்தை மாலை சுற்றிக் கொண்டிருத்தல், உடல் பலஹீனம் போன்றவைகளால் மிகவும் பயப்படுவார்கள்.

தற்போது இவற்றிற்கு தீர்வாக அலோபதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்து விடுகிறார்கள். அறுவை சிகிச்சைக்கு பின் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மிக எளிமையான நாட்டு மருந்துகள் குழந்தை பிறப்பை எளிதாக்குகின்றன. கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றி பிரசவ வேதனையே தெரியாமல் குழந்தையை பெற்றெடுக்கலாம்.

சாதம் கொதிக்கும்போது ஒரு தம்ளர் நீர் எடுத்து அதனுடன் பசு வெண்ணெய் சிறிது போட்டு சீரகத்தூள் கலந்து தினசரி குடிக்க வேண்டும். எப்போதும் வீட்டில் சுக்கு காப்பி போட்டு வைத்துக்கொண்டு அவ்வப்போது குடிக்க கொடுத்து வர வேண்டும். சுக்கு காப்பியில், சுக்கு, மிளகு, திப்பிலி, அக்கரா, சித்தரத்தை, நறுக்குமூலம் ஆகிய மூலிகைகளுடன் சாரணை வேர் கட்டாயம் சேர்த்து தயாரித்து கொடுக்க வேண்டும்.

பிற மூலிகைகள் ஐந்து கிராம் சேர்த்தால் சாரணை வேர் 10 கிராம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசி மாதத்தில் ஆடாதோடை வேர் கஷாயம் 200 மிலி கொடுக்க வேண்டும். இது இடுப்பு எலும்புகளை இளக்கமாக (flexible) வைத்துவிடும். இதனால் எடை அதிகம் கொண்ட குழந்தையாகவோ மாலைசுற்றிய குழந்தையாகவோ இருந்தால் கூட நிச்சயம் சுகபிரசவம்தான்.