Home சமையல் குறிப்புகள் சில்லி சப்பாத்தி

சில்லி சப்பாத்தி

31

download (1)தேவையான பொருள்கள் :

சப்பாத்தி – 4
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
தக்காளி சாஸ் – 2 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சிவப்பு புட் கலர் – சிறிது
கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு – சிறிது
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி

செய்முறை :

* சப்பாத்தி, தக்காளி, வெங்காயம் மூன்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

* புட் கலரை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தக்காளி சாஸ், கரைத்து வைத்துள்ள கலர் தண்ணீர் எல்லாவற்றயும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.

* பிறகு அதனுடன் சப்பாத்தி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறுதியில் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.

* சுவையான சில்லி சப்பாத்தி ரெடி. மீந்து போன சப்பாத்தியை இவ்வாறு செய்து சுவையாக சாப்பிடலாம்.