சிறுநீரைப் பொருத்தவரை எல்லோருடைய சிறுநீரும் நாற்றமடிப்பதில்லை. சிலருடைய சிறுநீர் காரத்தன்மை கொண்டதாக இருக்கும். சிலருடைய சிறுநீரின் வாசத்தில் இனிப்புத்தன்மை கலந்திருக்கும். சிலருடைய சிறுநீரில் நாற்றமடிக்கும். இவற்றிற்கெல்லாம் என்ன காரணம்?…
உடல் ஆரோக்கியமாக இருந்தால், குறைந்தபட்சம் 7 நொடிகள் சிறுநீர் கழிப்பார்கள். ஆனால் அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும், 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழித்தால், அதற்கு நோய்த்தொற்றுக்களின் பாதிப்புகள் இருப்பதே காரணமாகும்.
சிறுநீர் கழிக்கும் போது, அது மிகவும் துர்நாற்றம் வீசினால், சிறுநீரகத்தின் வழியாக குளூக்கோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.
ஒளிகுர்யா (oliguria) எனும் சிறுநீரகத்தின் ஒரு நிலை, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரைடு போன்ற 3000 கூறுகள் இருக்கின்றது.
தினமும் நாம் காரமான உணவுகள், காபி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதால், உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.
நீச்சல் குளத்தில் ஒருவர் குளிக்கும் போது, அவர்களின் கண்கள் சிவந்து இருக்கும். இதற்கு காரணம் குளோரின் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு உள்ளது என்று அர்த்தம்.
காலையில் எழுந்தவுடன் நாம் முதல் முறையாக கழிக்கும் சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் மார்னிங் பீ என்று கூறுகின்றனர்.
இதுபோன்று சிறுநீர் கழிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.