ஆண்களோ, பெண்களோ உடலுறவு தொடர்பாக பிரச்சனைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பிரச்சனைகள் என் உலகம் முழுவதும் இப்பிரச்சனைகள் பற்றி பேசாதவர்களே இல்லை எனலாம், ஆனால் எல்லோருக்கும் பொதுவான பிரச்சனைகள் பற்றி சொல்லவேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.
பொதுவாக ஆண்களுக்கு ஆண்குறியின் நீளம் தொடர்பாக எப்போதுமே ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கின்றது, அதுவும் ஆண்குறி சிறிதாக உள்ளதென்ற கவலை இருக்கும், கட்டிளம் பருவ வாலிபர்களிடையே இந்தக்கவலை கொஞ்சம் பெரிதாகவே இருக்கும்,சிலருக்கு அது தாழ்வுமனப்பாண்மையாகவே மாறிவிடுகின்றது, தம்மால் தமது துணையை சந்தோசமாக வைத்திருக்க முடியாதென்ற மிகத்தவறானா முடிவுக்கும் அவர்கள் தள்ளப்படுகின்றனர், ஆனால் இதுகுறித்து மருத்துவர்கள் சொல்லும் தகவல் முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றது, பொதுவாக உடலுறவுக்கு ஆண்குறியின் எழுர்ச்சித் தன்மையில் தங்கியிருக்கின்றது என்பதுதான், அதைவிட சிறிய ஆண்குறியே எழுற்சிகொள்ளும் தன்மை ஒப்பிட்டளவில் கூடியது என்பதே அவர்களின் கருத்து, இது ஆய்வுக்குட்படுத்தியபின் தரப்பட்ட தகவலாகும்.
ஆண்குறியின் அளவுக்கேற்ப அதனை அனுமதிக்கும் விட்டுக்கொடுக்கும் (எலாஸ்டிக்) தன்மை உடையது பெண்குறி ஏலவே ஆண்குறியின் ஏழு சென்டிமீட்டர் அளவே திருப்பதியான உடலுறவுக்கு தாராளமானது என்பதுவே மருத்துவத்தின் தகவல் எனவே உடலுறவில் இதுவொரு பிரச்சனையே இல்லை என்பதே மருத்துவர்கள் தருகின்ற செய்தி.எனவே ஆண்குறியின் அளவையிட்டு கவலைகொள்ளவே தேவையில்லை. உடலுறவென்பது மனதளவில் ஒன்றுபட்ட தம்பதியினருக்கே பெரியளவில் வெற்றியைத்தருகின்றது என்பதுடன், உடலுறவுக்கு முன் ஒருநிலைப்படுத்தப்பட்ட மனம், தம்பதிகளிடையான அன்பு, உடலுறவுக்கு முந்தைய சிறுசிறு விளையாட்டுக்கள் என்பவற்றைப்பொறுத்தே அதன் முழு அளவிலான சந்தோசமும் தங்கியுள்ளது என்பதே உண்மையான விடையம். எனவே தேவையற்ற விடையங்களையிட்டு கவலைகொள்ளாமல், இல்லறத்தை நல்லறமாக்குங்கள்..