ஒரு குழந்தைக்கு சிறந்த பராமரிப்பு பெற்றோர்கள் மூலம் வழங்கப்படுகிறது, எனினும், தொழில்முறை மற்றும் பிற கடமைகள் காரணமாக, பெற்றோர்கள் குழந்தைகளை பராமரிக்க தினப்பராமரிப்பு மையங்களை சார்ந்திருக்கக் கூடும். ஒரு குழந்தை பாதுகாப்பாக இருப்பது, அதற்கு நல்ல பராமரிப்பு கிடைப்பது மற்றும் குழந்தையின் கல்வி சார்ந்த மற்றும் உணர்வு சார்ந்த தேவைகளை உறுதியளிப்பது முதலியவை முதன்மையான தேவையாக இருக்கின்றன.
சரியான தினப்பராமரிப்பினை தேர்வு செய்தல் (Selecting the right daycare)
நீங்கள் உங்களது குழந்தைக்கு ஒரு தினப்பராமரிப்பு மையத்தை தேர்வு செய்வதற்கு முன் மனதில் இருத்த வேண்டிய சில முக்கிய கருத்துக்களை இங்கே காணலாம்:
கருத்து (Feedback)
உங்களது நண்பர்கள், அண்டை வீட்டார், பரிந்துரைப்பவர்கள் ஆகியோரிடம் விசாரியுங்கள். மேலும் தினப்பராமரிப்பு மையத்தினால் வழங்கப்படும் பரிந்துரை நபருக்கு கூட அவர்கள் குழந்தையை பராமரிக்கும் விதம் தெரிந்திருக்கும்.
மேலும், தினப்பராமரிப்பு மையத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் குழந்தையின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கிறார்களா என்பதையும் விசாரியுங்கள்.
உள்கட்டமைப்பு மற்றும் வேலை நேரங்கள் (Infrastructure and working hours)
வகுப்புறை மற்றும் விளையாட்டு கூடங்களில் சிசிடிவி கவரேஜ் இருக்கிறதா என கவனியுங்கள்; கற்பிக்கும் கருவிகள், விளையாட்டு பொருட்கள், குடிநீர், சமையலறை மற்றும் மற்ற தேவையான வசதிகள் இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும்.
வேலை நேரம், நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தினப்பராமரிப்பு மையத்தின் கொள்கைகளை கண்காணியுங்கள்.
போக்குவரத்து (Transportation)
உரிய ஆதரவு ஊழியர்களுடன் கூடிய சிறந்த போக்குவரத்து முறையை தினப்பராமரிப்பு மையம் கொண்டிருக்கிறதா? என்பதை கவனியுங்கள்.
பயிற்சி பெற்ற ஊழியர்கள் (Trained personnel)
அங்கீகாரம், தொடர்பு மற்றும் தொடர்புடைய அமைப்புகளிடம் பதிவு செய்திருத்தல் முதலியவற்றில் மையத்தின் சான்றுகளை சரிபாருங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் சரியான கவனத்தை உறுதி செய்வதற்காக ஊழியர்களுக்கும் குழந்தைகளுக்குமான விகிதம் போதுமானதாக இருக்கிறதா என ஆய்வு செய்யுங்கள்.
பெற்றோர்களிடம் இருந்து பிரிந்திருப்பதால் கவலையில் இருக்கும் குழந்தைகளை கையாளும் அளவிற்கு ஊழியர்கள் நன்கு பயிற்சி பெற்றிருக்கிறார்களா? ஆசிரியர்களின் கல்விப் பின்னணி என்ன? என்பதை கவனியுங்கள்.
கட்டணம் (Fee)
கட்டணம் எவ்வளவு, கட்டணம் செலுத்த ஏற்றுக்கொள்ளப்படும் முறை என்ன மற்றும் அவர்கள் தவணை முறைகளில் கட்டணம் பெற்றுக் கொள்கிறார்களா? முதலியவற்றை கவனியுங்கள்.
சுகாதாரம் மற்றும் சுத்தம் (Health and Hygiene)
அந்த மையத்துடன் யாரேனும் மருத்துவ நிபுணர்கள் இணைந்திருக்கிறார்களா? ஏதேனும் மருத்துவ அவசரத்தைக் கையாள்வதற்கு ஊழியர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்களா? ஆகியவற்றை கவனியுங்கள்.
கொள்கைகள் (Policies)
ஊட்டச்சத்து, வருகைகள், ஒழுக்கம், போக்குவரத்து, உடல்நலக்குறைவு, மருந்துகள் மற்றும் சுகாதாரத் தரநிலைகள் முதலியவற்றில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உறுதிபடுத்தும் கொள்கைகளை அவர்கள் கொண்டிருக்கிறார்களா என்பதை கவனியுங்கள். குழந்தைகள் குழுவாக இணைதல் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் தின்பண்டங்கள்/ உணவு பரிமாற்றம் முதலிய மற்ற விசயங்களையும் கருத்தில் கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஒரு தினப்பராமரிப்பு மையத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் திருப்தியளித்து, உங்களது தேவையை பூர்த்தி செய்வதாக இருந்தால், இனி அந்த மையத்தில் நீங்கள் கவனிப்பதற்கு ஏதுமில்லை, இறுதி முடிவு எடுத்து விடலாம்.