Home சமையல் குறிப்புகள் Maddan சிம்பிளான… மட்டன் கட்லெட்

Maddan சிம்பிளான… மட்டன் கட்லெட்

24

சிம்பிளா செய்யக்கூடிய மட்டன் கட்லெட் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையானவை

சிறிய துண்டுகளான மட்டன் – 200 கிராம்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 1/2 டீஸ்பூன் ( நசுக்கவும்)
இஞ்சி – 1/2 டீஸ்பூன்
வெங்காயம்- 1 ( நறுக்கவும்)
பச்சை மிளகாய் -1 ( நறுக்கவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
வேகவைத்த ஊருளைக்கிழங்கு – 3 அல்லது 4
கொத்தமல்லி தழை – சிறிதளவு
முட்டை – 1
ரொட்டித்துகள் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

குக்கரில் மட்டன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 அல்லது 5 விசில் விட்டு இறக்கவும்.

கடாயை வைத்து எண்ணெய், சோம்பு, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

அதனுடன், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். குக்கரில் வேகவைத்த மட்டனையும் சேர்த்து கிளறி விட்டு நறுக்கிய கொத்தமல்லி தழையைச் சேர்த்து நன்றாக கிளறி விட்டு அடுப்பை அணக்கவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டை ஊற்றி அடித்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் ரொட்டித்துகள்களை பரப்பிக் கொள்ளவும்.

மட்டன் கலவை நன்றாக கலந்து உள்ளங்கையில் தட்டையாக பிடித்து முட்டையை நனைத்து ரொட்டித்துகளில் பிரட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் பேனை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு மட்டன் கட்லெட்டை இட்டு பொன்னிறமாக இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

சுவையான சாப்பிட சொர்க்கமாக இருக்கும் மட்டன் கட்லெட் ரெடி!