Home சூடான செய்திகள் சின்ன செயல்பாடு இன்பத்தை அதிகரிக்கும்!

சின்ன செயல்பாடு இன்பத்தை அதிகரிக்கும்!

24

love2இல்லறம் மற்றும் வாழ்க்கையின் பெரும் இன்பம் அனைத்தும் சின்ன சின்ன விஷயங்களில் தான் மறைந்திருக்கிறது. வெளிநாடு சுற்றுலா பயணம் அழைத்து செல்வதைவிட, புதியதாக அவர்கள் கட்டியிருக்கும் புடவை நன்றாக இருக்கிறது என்று கணவன் சொல்லும் அந்த ஓர் வார்த்தை மூலம் மனைவி அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை.
நிறைய பேர் மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகள் நிறைய பணம் வைத்திருக்கிறார்கள் என தவறாக எண்ணுவதுண்டு. ஆனால், பணம் எள்ளளவும் இல்லற மகிழ்ச்சிக்கு உதவாது. பொருளாதார நிறைவுகளுக்கு மட்டுமே பணம் தேவையே தவிர மகிழ்ச்சிக்கு அல்ல…..

ஐ லவ் யூ
தினமும் உங்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது, உங்கள் மனைவியை விட்டு பிரிந்து செல்லும் போது ஐ லவ் யூ சொல்லி கிளம்புங்கள். இது உங்கள் இருவர் மத்தியிலான உறவில் இறுக்கத்தை அதிகரிக்கும்.
ஒன்றாக அமர்தல்
வீட்டிலும் சரி, வெளியே சென்றாலும் சரி எதிர் எதிரே அமர்வதை விட, உங்கள் மனைவிக்கு அருகே அமரும் வழக்கத்தை கடைபிடியுங்கள். அந்த இதமான உணர்வு உங்கள் நாளையும், இரவையும் சிறப்பாக்கும்.
காம்ப்ளிமெண்ட்
தினமும் ஒரு முறையாவது உங்கள் மனைவிக்கு காம்ப்ளிமெண்ட் கொடுங்கள். சமையல், உடை அலங்காரம், அவர்களது மேக்-அப் என ஏதேனும் ஒன்றை பற்றி நன்றாக இருக்கிறது என்று காம்ப்ளிமெண்ட் கூறுவதால் காதல் அதிகரிக்கும்.
உறுதுணையாக இருத்தல்
ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். ஊக்குவிக்க வேண்டும். வீட்டு வேலையாக இருப்பினும், அலுவல் வேலையாக இருப்பினும் ஊக்குவித்தல் மிகவும் அவசியம். கணவனின் ஊக்கம் தான் மனைவியை பெருமளவு சிறக்க உதவும்.

நேர்மறை எண்ணங்கள்
என்றும் எதிர்மறையாக பேச வேண்டாம், நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் தனிபட்ட வாழ்க்கை மட்டுமின்றி, இல்லற வாழ்க்கையிலும் மேலோங்க உதவும்.
அழைப்பு
அலுவலகம் சென்றவுடன் உங்கள் துணையை மறந்துவிட வேண்டாம். குறைந்தபட்சம் உணவருந்தும் இடைவேளையிலாவது மொபைலில் அழைத்து பேசுங்கள் அல்லது குறுஞ்செய்தி அனுப்புங்கள்.
நன்றி
கணவன் மனைவி உறவுக்கு மத்தியில் நன்றி கூற அவசியம் இல்லை என்பார்கள். ஆனால், நன்றி கூறுதல் என்பது மிகவும் நல்ல பழக்கம். இது அனைத்து உறவுகள் மத்தியிலும் ஓர் இறுக்கம், பிணைப்பு ஏற்பட உதவும்.