Home சமையல் குறிப்புகள் சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை

சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை

15

mut_miniதேவையான பொருட்கள்:

சிக்கன் லிவர் – 200 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு, மசாலா பொடிகளை சேர்த்து நன்கு கிளறிய பின் தக்காளியைப் போட்டு, நன்கு மசியும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் சிக்கன் லிவரை சேர்த்து பிரட்டி, குறைவான தீயில் மூடி வைத்து 15 நிமிடம் லிவர் நன்கு வேகும் வரை வைக்க வேண்டும்.

* இறுதியில் மூடியை திறந்து, கெட்டியாக வந்ததும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை ரெடி!!!