Home காமசூத்ரா சாமுத்ரிகா லட்சணம் -மூன்று வகை ஆண்கள்

சாமுத்ரிகா லட்சணம் -மூன்று வகை ஆண்கள்

261

பொதுவாக ஆண்களை சாமுத்திரிகா லட்சணத்தின்படி, மூன்று வகைகளாகப் பிரித்திடுவர். ஓர் ஆண் இம்மூவகைகளில், எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை அந்த ஆணின் பிறப்புறுப்பின் நீளத்தைக் கொண்டு தெரிந்துகொள்ளலாம். முந்தைய காலங்களில் மட்டுமல்லாது, இன்றும் கூட திருமணப் பொருத்தம் பார்த்து, மணமகளுக்கும் மணமகனையும், மணமகனுக்கு மணமகளையும் தேர்வு செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வாறு பொருத்தம் பார்க்கும் போது, பிற பொருத்தங்களுடன், வகைப் பொருத்தமும் பார்க்கப்படுகிறது. இந்த வகை ஆணுக்கு இந்த வகை பெண்ணையே தெரிவு செய்து மணமுடிக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறுவர். இவ்வாறு வகைப்பொருத்தம் சரியாக அமைந்திடுமானால், திருமணம் நடந்த பிறகு அத்தம்பதியரின் இல்வாழ்க்கையில் திருப்தியும், சுகமும், ஆனந்தமும் இருந்திடும். ஆண்களை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர். அவை:

முயல் சாதி வகை
காளைச் சாதி வகை
குதிரைச் சாதி வகை என்பனவாகும்.
முயல்சாதிவகை:செவ்வரி படர்ந்த கண்களையும், அரிசி முனை போன்ற வெண்மையான பற்களையும் பெற்றிருக்கும் முயல் சாதி ஆண்களின் முகம், பௌர்ணமி முழு நிலவைப் போன்று இருக்கும். இவர்களுடைய உள்ளங்கைகள் தாமரை மலர் போன்று காணப்படும். இவர்கள் உண்மை விளம்பிகளாக இருப்பார்களே ஒழிய ஒருபோதும் தீயவற்றை எண்ணவோ, பேசவோ மாட்டார்கள். இவர்களுடைய கழுத்துப் பகுதி பருத்துக் காணப்படும். இத்தகைய நல்லொழுக்கம் கொண்ட ஆண்களின் பிறப்புறுப்பின் நீளம் சுமார் நாலை அங்குலம் இருக்கும். மேலும், தாமரை மலரை ஒத்திருக்கும் மணத்தை உடைய விந்தினைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் பெண்ணுடன் புணரும் காலம், வெகு குறுகிய காலமாகவே இருந்திடும். பெரும்பாலும், சிறிதளவே அதுவும் சூடாக உள்ள உணவையே உண்பார்கள்.

காளைச்சாதிவகை:காளைச் சாதி என்பதற்கு ஏற்றபடி, இவ்வகை ஆண்களின் நெற்றிப் பகுதி அகன்று இருப்பதோடு, உயர்ந்த தலைப் பகுதியையும் உடையவர்களாக இருப்பார்கள். இதழ்கள் பருத்தும், காதுகள் தடித்தும், கழுத்துப் பகுதி பருமனாகவும், ஆமையின் முதுகு போன்று உயர்ந்து, வட்டமாய் உள்ள வயிற்றையும், தூலமான உடம்பினையும், படர்ந்திருக்கும் பெருத்த தோள்களையும் பெற்றிருப்பர். சாந்த குணத்தையும், அமைதியான போக்கினையும் கொண்டு வாழும் காளைச் சாதி ஆண்களின் கண்கள் செவ்வரி படர்ந்து இருப்பதோடு, சிவந்த கைகளையும் பெற்றிருப்பார்கள். இவர்கள் நடந்து வந்தால் மதயானை நடந்து வருவதுபோல் ஒருக்கும். சாந்தமும் பொறுமையும் இவர்கள் இயல்பு. எவ்வாறு கார்மேகம் பாராபட்சமின்றி மழையை உலகெங்கும் பொழிகிறதோ, அதே போன்று உயர்ந்தவர், தாழ்ந்தவர் என மனிதர்களை வித்தியாசப் படுத்தி நடந்து கொள்ளாமல், அனைவரையும் ஒன்றாகவே மதித்து நடப்பர். பசியைப் பொறுத்திட இயலாத இவ்வகைச் சாதி ஆண்கல், பாம்பொன்று நெட்டுயிர்த்து உறங்குவது போன்ற தன்மையை பெற்றிருப்பர். கபம் மிகுதியாக உள்ள சிலேத்தும உடம்பினைடும். பருத்த விரல்களையும் உடையவர்களாகிய இத்தகியோரின் விந்தானது சுண்ணாம்பு போன்ற உவர் மணத்தைக் கொண்டிருக்கும். இவர்களின் பிறப்புறுப்பானது கிட்டத்தட்ட ஆறேமுக்கால் அங்குலம் இருக்கும்.

குதிரைச்சாதிஆண்கள்:குதிரைச் சாதி ஆண்களுக்கு, முகம், உதடுகள், காது, கழுத்துப் பகுதி ஆகியவை செழுமையாக அமையப் பெற்றிருக்கும். முதுகில் புரளுமளவிற்கு நீளமான தலைமுடியைப் பெற்றிருக்கும் இவ்வகை ஆண்களுக்கு, நீண்ட நீண்ட வெண்மையான பற்கள் இருக்கும். இவர்களுடைய விரல்கள், நகங்கள், மற்றும் கால்கள் பார்ப்பதற்கு விகாரமாய் நீண்டு கோணலாகக் காணப்படும். குதிரைச் சாதி ஆண்கள், பெரும்பாலும், கபட நெஞ்சம் கொண்டவர்களாகவே இருந்திடுவர். வெகுநேரம் தூங்கும் இயல்பைக் கொண்ட இத்தகையோரின் கண்கள் உருண்டு, வட்ட வடிவுடன் காணப்படும். மிகுதியான தாதுவை இவர்கள் பெற்றிருந்தாலும், இவர்களின் விந்து முடை நாற்றம் கொண்டதாக இருக்கும். பிற சாதி ஆண்களை விட அதிகமான நீளத்தை அதாவது சுமார் ஒன்பது அங்குலம் அளவுள்ள பிறப்புறுப்பைக் கொண்டவர்களாக குதிரை சாதி ஆண்கள் இருப்பார்கள்.