Home ஆரோக்கியம் சளி இருமலுக்கு இயற்கை மருத்துவம்

சளி இருமலுக்கு இயற்கை மருத்துவம்

16

மிளகையும் வெல்­லத்­தையும் வெறும் வயிற்றில் உட்­கொண்டால் இருமல், நீர்க்­கோவை ஆகி­யவை குண­மாகும். சீர­கத்­தையும் கற்­கண்­டையும் மென்று தின்றால் இருமல் குண­மாகும். நான்கு மிள­கையும், இரு கிராம்­பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்­றி­லையில் மடித்து மென்று விழுங்­கினால் இருமல் குண­மாகும். நான்கு வால் மிளகைச் சிறி­த­ளவு புழுங்­க­ல­ரி­சி­யுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பரு­கினால் இருமல் குண­மாகும்.

தூய்­மை­யான அரு­கம்­புல்லை எடுத்து நன்­றாக மென்று பற்­களில் வலி­யுள்ள பகு­தியில் ஒதுக்­கினால் பல்­வலி உடனே குண­மாகும். பல் துலக்கி பின் தேனை ஈறு முழு­வதும் தட­வ ­வேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக் ­கொப்­பளித்தால் பற்­களில் உள்ள கிரு­மிகள் அழியும். தேங்காய் எண்­ணெயை நாள்­தோறும் பல­முறை உதட்டில் தட­வினால் உதடு வெடிப்பு, உதட்டு புண், தோல் உரிதல் ஆகி­யன குண­மாகும்.

அரி­சி­யையும் திப்­பி­லி­யையும் சிறி­த­ளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊற­வைத்து தினம் ஒரு திப்­பி­லியை வாயில் போட்டு அடக்­கிக்­கொண்டால் ஞாபக சக்தி அதி­க­ரிக்கும். மழைக்­கா­லத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறி­த­ளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்­து­ணர்வு பெறலாம். துளசி இலையை நன்­றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்­தூளில் சேர்த்து டீ தயா­ரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும்.

குளிர்­கா­லத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய சளி, கபம் நீங்கும். அரி­சி­பொ­ரியைத் தண்­ணீரில் வேக­வைத்து சாப்­பிட்டால் இரத்த கொதிப்­பினால் வரக்­கூ­டிய தலை சுற்றல் குண­மாகும். தலை சுற்­ற­லுடன் வாந்தி ஏற்­பட்டால் வெங்­கா­யத்­தினை சாறெ­டுத்து அத­னுடன் தேன் கலந்து சாப்­பி­டலாம். துளசி இலைச்­சாறு, 150 மி.கிராம் கற்­கண்டு இவை இரண்­டையும் கலந்து சர்ப்­பத்­தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தின­சரி இரு­வேளை உட்­கொண்ட பின் பசும்பால் அருந்­தலாம்.

இந்த சர்பத் சர்­வ­ரோக நிவா­ர­ணி­யாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகி­ய­வற்றைப் பலப்­ப­டுத்தும். ஞாப­க­சக்­தியை அதி­க­ரிக்கும். கண்­களில் நீர்­வ­டியும் பிரச்சினை உள்­ள­வர்கள் தினந்­தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்­பு­களை மென்று தின்றால் நீர் வடிதல் குண­மாகும். தூய்­மை­யான தாய்ப்­பாலில் இரு­து­ளியைக் கண்­களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகி­யன குண­மாகும். மாதுளை இளைச்­சாற்றில் சில துளி­களை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து இரத்தம் வடி­வது நிற்கும்.

சித்­த­ரத்­தையைச் சிறி­த­ளவு எடுத்­துப்­பொ­டித்து பசும்­பாலில் கலந்து உட்­கொண்டால் தும்மல், மூக்கில் நீர்­வ­டிதல் குண­மாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம் ஆகி­ய­வற்றை இடித்து நெருப்பு அனலில் இட்­டுப்­ பு­கையைப் பிடித்தால் மூக்­க­டைப்பு, மூக்கில் நீர்­வ­டிதல் முதலிய நோய்கள் குண­மாகும். எலு­மிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடுபடுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்­றுக்கு 3வேளை வீதம் உள்­ளங்­கையில் விட்டு உட்­கொள்ள வேண்டும்.

இதனால் தொண்டை வலி, தொண்டை தொடர்­பான நோய்கள் குண­மாகும். வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பரு­கினால் வறட்டு இருமல் குண­மாகும். தேனையும், எலு­மிச்சை பழ­ச்சாற்­றையும் சம­அ­ளவில் உட்­கொண்டால் சளி இருமல் ஆகி­யன குண­மாகும். நீர்­கோவை விலகும்.