Home பெண்கள் அழகு குறிப்பு சருமத்தை மினுமினுக்க செய்யும் மஞ்சள்

சருமத்தை மினுமினுக்க செய்யும் மஞ்சள்

43

சருமத்தை மினுமினுக்க செய்யும் மஞ்சள்அழகு! – உச்சரிக்கும்போதே உற்சாக சிலிர்ப்பை உருவாக்கும் மூன்றெழுத்து மந்திரம் இது! எல்லோருக்குமே அழகாக இருக்கத்தான் ஆசை. வண்ண ஆடைகள் உடுத்தி, மின்னுகிற நகைகள் அணிந்து கண்ணாடி முன் நின்று பார்த்ததும் `ப்ச்ஸ. பளிச்சுனு தெரியலையே!’ என்று முகம் வாடிப்போகிறார்கள் ஏராளமானபெண்கள்.

ஆடைகளிலும் நகைகளிலும் இருப்பது எக்ஸ்ட்ரா ஜொலிப்பு! ஆனால், அடிப்படை அழகு முகத்திலும் சருமத்திலும் தான் இருக்கிறது. கூந்தல் முதல் புருவம், கண்கள், உதடு, கழுத்து, முகம், கை, கால், தோல் என ஓட்டுமொத்த உறுப்புகள் வரை `அத்தனைக்குமான அழகு சரக்கு அஞ்சறைப் பெட்டியிலேயே இருக்கு!’ என்பது தான் நமது முன்னோர்கள் நமக்குத் தந்த அதிசய பரிசு!

நீங்களாகவே நிறைய செலவழித்து, உங்கள் புறத் தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்ளும் போது பக்க விளைவுகள் ஏதாவது வருமோ? என்று பயந்தபடியே அழகு படுத்திக் கொள்வதை விட, சாதாரண சமையல் பொருட்களிலேயே, `பளீர்’ அழகு ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன என்பது தான் அனுபவ பூர்வமான உண்மை.

சுருக்கமாகச் சொன்னால் செலவேயில்லாமல் உங்களை அழகாக்கிக் காட்டுகிற அஞ்சறைப்பெட்டி `மேஜிக்’ இது! நமது முன்னோர்கள் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாத்த இயற்கையான அழகுப் பொருட்களை, மேற்கத்திய நாகரீகம் ஏற்படுத்திய பல பாதிப்புகளில் அலட்சியப்படுத்தி விடுகிறோம் என்பது தான் வேதனை.

டென்ஷன், கவலை மிகுந்த இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் முகத்தில் நாளொரு சுருக்கமும், சருமத்தில் பொழுதொரு வறட்சியும் தோன்றி உங்களை வருத்தப்பட வைக்கிறது தானேஸ கவலை எதற்கு? கை கொடுக்க அஞ்சறைப்பெட்டி காத்திருக்கு, அதிலுள்ள எளிமையான பொருட்களே போதும். உங்களுக்கு இளமை பொலிவை தந்து `அழகுப் பெண்ணாக’ ஜொலி ஜொலிக்க வைக்கும்.

மஞ்சள், கடுகு, வெந்தயம்ஸ இதெல்லாம் வெறும் சமையல் பொருட்கள் என்று யார் சொன்னது? இந்த `அஞ்சறைப்பெட்டி’ சமாச்சாரங்களில், அழகு ரகசியங்கள்ஸ அதுவும் பக்கவிளைவே தராத `பளிச்’ ரகசியங்கள் அடங்கி இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

பாடி ஸ்பிரே, சென்ட் என்று ஃபாரின் நறுமண சமாச்சாரங்கள் புழக்கத்துக்கு வரும் முன்பே, நம் நாட்டுப் பெண்கள் கண்டுபிடித்த வாசனைப் பொருள் தான் மஞ்சள். அது வெறும் வாசனைப் பொருள் மட்டுமல்லஸ அழகைக் கூட்டும் மந்திர விஷயங்களும் அதில் ஏராளமாக அடங்கியிருக்கின்றன.

மஞ்சள்:-நம் நாட்டுப் பெண்கள் அந்தக் காலத்திலேயே கண்டுபிடித்த, செலவே இல்லாத காஸ்மெடிக் ஐட்டம் மஞ்சள் தான். இதில் பசு (மை)ம் மஞ்சள் (இதையே காயவைத்தால் கஸ்தூரி மஞ்சள்), கிழங்கு மஞ்சள், விரலி மஞ்சள் என்று வகைகள் உண்டு.

இதில் அழகோடு அதிக தொடர்புடையது பசும் மஞ்சள் தான். பொங்கல் அன்று பொங்கல் பானையைச் சுற்றிக் கட்டுவோமே அதே தான். சருமத்தை மிருதுவாக்கி, மினுமினுக்க வைக்கும் சக்தி இந்தப் பசும் மஞ்சளுக்கு உண்டு. அதன் மற்ற உபயோகங்கள் பற்றிப் பார்க்கலாமா?

பசும் மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து அரைத்து பாசிப் பயிறு மாவோடு கலந்து, தினமும் உடலில் பூசிக் குளித்தால் தோல் சுருக்கத்தை கிட்ட நெருங்கிவிடாமல் இளமையை தக்க வைக்கலாம். இது நல்ல மணத்தைத் தருமே தவிர, முகமெல்லாம் மஞ்சளாக ஒட்டிக் கொள்ளாது. அதனால் எல்லா வயதினரும், எந்த வகை சருமத்தினரும் உபயோகிக்க உகந்தது.

சிலருக்கு ஆண்களைப்போல உடலிலும், முகத்திலும் ரோமங்கள் வளர்ந்திருக்கும். அழ கைக் குலைக்கும் அந்த முடிகளை அகற்றவும் பசும் மஞ்சள் சம்பந்தப்பட்ட எளிமையான சிகிச்சை ஒன்று இருக்கிறது. மஞ்சள் இலை மற்றும் குப்பை மேனி இலையை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

குளித்த பிறகு, இந்த மஞ்சள் விழு தை உடலில் பூசிக் கழுவுவதை வழக்கமாக்கிக் கொண்டால் தேவையற்ற முடிகளின் அடர்த்தி குறைந்து மென்மையடையும். கொஞ்சம் கொஞ்சமாக அவற்றின் வளர்ச்சி குறைந்து. நாள்பட வளர்ச்சி முழுமையாக நின்று விடும்.

பெண் குழந்தைகளுக்கு, பிறந்தது முதல் தினசரி இந்த மஞ்சள் விழுதை பூசினால் மாசு மருவற்ற பட்டு போன்ற மேனி வாழ் நாளற் முழுக்க நிலைத்திருக்கும். ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். எந்த வகை மஞ்சளும் முடியை மென்மையாக்குமே தவிர, முடியை நீக்கும் தன்மை அதற்குக் கிடையாது.

அந்த வேலையைச் செய்வது குப்பைமேனி இலைதான். கழுத்து, கணுக்கால், முட்டிஸ போன்ற இடங்களில் கருமை படர்ந்து இருக்கிறதா? கவலைப்படாதீர்கள். அதற்கும் அற்புதமான ஒரு சிகிச்சை இருக்கிறதுஸ பசும் மஞ்சளை அரைத்து தயிரில் கலந்து அந்த கருமை ஏரியாக்களில் தடவுங்கள்.

அரைமணி நேரம் ஊற வைத்த பிறகு குளித்தால் கருமை மறைவதை கண்கூடாகப் பார்க்கலாம். தடிப்பான தோல் தான் கருமையாகத் தெரிகிறது. மஞ்சள், தயிர் கலவையை பூசுவதால் தோல் மென்மையடைகிறது. நிற மாறுபாடும் நீங்குகிறது. வறண்ட சருமத்தினருக்கு மிகச்சிறந்த சிகிச்சை இது.