மஞ்சள் தூள் ஒரு கிருமி நாசினி பொருள். இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இது பல வகைகளில் நன்மைகளைத் தருகிறது.
அதிலும் இதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் போக்கலாம்..
மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.
பெண் குழந்தைகளுக்கு, பிறந்தது முதல் தினசரி இந்த மஞ்சள் விழுதை பூசினால் மாசு மருவற்ற பட்டு போன்ற மேனி வாழ் முழுக்க நிலைத்திருக்கும்
. ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். எந்த வகை மஞ்சளும் முடியை மென்மையாக்குமே தவிர, முடியை நீக்கும் தன்மை அதற்குக் கிடையாது.
தோலில் சொறி, சிரங்கு, புண் இவற்றால் உள்ள கரும்புள்ளிகள் நீங்க குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர வேண்டும். ஒரு மாதத்திற்கு இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும். அழகு கூடும்.
பசும் மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து அரைத்து பாசிப் பயிறு மாவோடு கலந்து, தினமும் உடலில் பூசிக் குளித்தால் தோல் சுருக்கத்தை கிட்ட நெருங்கிவிடாமல் இளமையை தக்க வைக்கலாம். இது நல்ல மணத்தைத் தருமே தவிர, முகமெல்லாம் மஞ்சளாக ஒட்டிக் கொள்ளாது. அதனால் எல்லா வயதினரும், எந்த வகை சருமத்தினரும் உபயோகிக்க உகந்தது. ”.