Home ஆண்கள் சமையல் அறையில் இருக்கு ஆண்மையை அதிகரிக்கும் வயாகரா

சமையல் அறையில் இருக்கு ஆண்மையை அதிகரிக்கும் வயாகரா

37

imagesபொதுவாக, செக்ஸ் உந்துதலானது, சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவனையும் நிமிர்ந்து உட்காரச் செய்யக்கூடிய ஈர்ப்பு சக்தி உடையது. உடல் உறவுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. நாம் தினசரி சாப்பிடும் சாதாரண சமையலுக்குப் பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன.

• ஆண்மைகுறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும்காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம். வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப்படுகிற பெருங்காயத்தில் இனியவிறு விறுப் பூட்டும், உணர்ச்சிப் பெருக்கேற்படுத்தும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். சமையலில் தொடர்ந்து பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள். ஆண்மை குறைபாட்டால் உங்கள் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் “பெருங்காயம்”, பெருங்காயத்தால் ஆறிவிடும்.

• ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும். ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவிரகளை ஏற்படுத்தி ஆண்மை குறைவு பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று மூலிகை ஆராய்ச்சியாளர் கள் எச்சரிக்கின்றனர்.

• மிளகு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. மிளகு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக்கும் ஆற்றல் உள்ளது. நான்கைந்து மிளகுகளைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும், தாம்பத்தியத்துக்கு முன்பு சில மிளகுகளை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.

• பூண்டுக்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. சாப்பிட்டரத எளிதில் ஜீரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜீரணமான பின்னரே, அதாவது சாப்பிட்டு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபடவேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த பணியை பூண்டு எளிதில் செய்வதால், பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

• சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தம்பத்திய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேக வைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பே இந்த கலவையை சாப்பிட்டால், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின்றனர்.

• இது தவிர நாம் தினசரி உபயோகிக்கும் காய்கறிகள், தின்பண்டங்களில் கூட ஆண்மையை அதிகரிக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. சிறிய வெங்காயத்தில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. முருங்கை விதையில் ஆண்மையைப் பெருக்கும் “பென்-ஆயில்” உள்ளது. வல்லாரை இலையை துவையலாக செய்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்பை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது.

வெற்றிலைக்கு ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் உண்டு. நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் அமுக்கராகிழங்கை செக்ஸ் மன்னன் என்றே அழைக்கலாம். இது எல்லாம் கடையில் குறைந்த விலைக்கே கிடைக்கும் கடலை உருண்டைக்குக் கூட ஆண்மை யைப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் செக்ஸ் பிரச்சனைகள் பறந்தோடி விடும்