சிக்கன் – அரை கிலோ
சீரகச் சம்பா அரிசி – இரண்டரை கப்
சின்ன வெங்காயம் – ஒரு கப்
நாட்டுத் தக்காளி (பெரியது) – 3
பச்சை மிளகாய் – 10
இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 3 கப்
தயிர் – அரை கப்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – ருசிக்கேற்ப
தாளிக்க:
பட்டை – 2
லவங்கம் – 2
ஏலக்காய் – 4
பிரிஞ்சி இலை – 1
அன்னாசிப்பூ – 1
கடல்பாசி – 1
லவங்க மொட்டு – 1
சோம்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – அரை கப்
நெய் – கால் கப்
கொத்தமல்லித்தழை, புதினா – தலா ஒரு கைப்பிடி
செய்முறை :
* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
* சீரகச்சம்பா அரிசியைக் கழுவி ஊறவையுங்கள்.
* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு, நன்கு காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள்.
* தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் நன்றாக பொரியவேண்டும். தீயக்கூடாது, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிரியாணியின் மணமே, இந்த தாளிக்கும் பொருட்கள் நன்கு பொரிவதில்தான் இருக்கிறது.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போன வதக்கவும்.
* அடுத்து தக்காளி, மஞ்சள்தூள், புதினா, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.
* தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கி தொக்கு பதம் வந்தவுடன் சிக்கனை போட்டு, நன்கு வதக்குங்கள்.
* எல்லாம் சேர்ந்து பச்சை வாசனை போக நன்கு வதங்கியதும், தயிர், உப்பு போட்டு, அதிலேயே சிக்கனை நன்கு வேகவிடுங்கள்.
* சிக்கன் நன்கு வெந்தபின், தேங்காய்ப்பால் சேருங்கள். இதற்கு தண்ணீரே சேர்க்கக் கூடாது.
* பால் கொதிக்கும்போது, கழுவி வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசி வெந்து தண்ணீர் வற்றி மேலே வரும்போது, தட்டால் மூடி 5 நிமிடம் ‘தம்’ போடுங்கள்.
* இந்த மதுரை கோழி பிரியாணியின் மணம் ஊரையே இழுக்கும்!