Home பெண்கள் அழகு குறிப்பு கோடை வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பது எப்படி

கோடை வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பது எப்படி

23

201604260735285464_How-to-protect-your-skin-from-the-summer_SECVPFகோடைகால வெயிலின் தாக்கம் மனிதர்களுக்கு பல உபாதைகளைக் கொண்டுவருகிறது. வியர்வை அழுக்கு, சோர்வு, மயக்கம், கரும்புள்ளிகள், வறட்சி, நிறம் குறைதல், ஒரு சில நோய்கள் என பல தொல்லைகள். நம் தோலை சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் நேரடியாக தாக்கும் என்பதால், வெயில் அழகுக்கும் உடலுக்கும் ஆபத்தை விளைவிக்கும். அதனால், கோடையின் வெப்பத்திலிருந்து உடலை பராமரிப்பது அவசியமாகிறது.

வெயில் காலத்தில் உடலில் இருக்கும் நீர் வற்றிவிடாமல் பாதுகாப்பதும் மிகவும் அவசியமானது. வயது கூடும்போது சருமத்தின் நெகிழ்வு தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. முடி, கருவிழி, சருமம் போன்றவைகளுக்கு நிறத்தை தருவது மெலனின் என்ற ரசாயன பொருள். சூரிய கதிர்கள் சருமத்தைத் தாக்கும் போது அது சருமத்தை பாதிக்காமலிருக்க மெலனின் உதவுகிறது. தொடர்ச்சியாக சூரிய கதிர்கள் பட்டால் வெயில் படும் அந்த இடத்தில் மெலனின் அதிகமாக உற்பத்தியாகி சருமம் கறுத்து விடுகிறது.

கோடை காலத்தில் எல்லாருக்குமே உடலில் வியர்வை வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் விளைவாக துர்நாற்றம் ஏற்படும். எனவே நிறைய தண்ணீர் குடியுங்கள். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

வெயிலின் தாக்கம் முகத்தில் ஏராளமான கரும்புள்ளிகளை கொண்டு வரும். எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப்படுத்தி எடுத்துவிடும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவலாம். எக்காரணத்தை கொண்டும் பருக்களை கிள்ளிவிடாதீர்கள். இதனால் பருக்கள் அதிகமாகும்.

கோடை வெயிலில் அலைந்துவிட்டு வந்தபின் கண்கள் உஷ்ணத்தால் எரியும். வெள்ளரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி இமைகளின் மீது வைத்து ஒற்றி எடு ங்கள், கண் எரிச்சல் பறந்துவிடும். இளநீரை முகத்தின் மீது ஸ்ப்ரே செய்யுங்கள் அல்லது தடவிக்கொண்டால் முகசருமம் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் இருமுறை பேஸ்பேக் போட்டுக் கொள்ளலாம். தர்பூசணி பழத்தைக் கொண்டு எளிதாக வீட்டிலேயே பேஸ்பேக் தயாரிக்கலாம். தர்பூசணி பழத்தில் கொஞ்சம் பால், சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவிக்கொள்ளுங்கள். சுமார் இருபது நிமிடங்கள் வைத்திருந்து முகத்தைக் கழுவிவிடுங்கள். தர்பூசணி மற்றும் வாழைப்பழ பேக்குகளை வீட்டிலேயே நீங்கள் தயாரிக்கலாம். அவ்வப்போது தயாரித்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது தான் நீங்கள் செய்யவேண்டிய முதல் சரும பராமரிப்பு. அடுத்து ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளியுங்கள். வெயிலால் மட்டுமின்றி வெயிலின் புழுக்கத்தால் கூட உடல் வியர்த்து சருமத்தில் அழுக்கு தேங்கிவிடும்.

கோடை காலத்தில் சோப்பை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும் போது பவுடர் பூசுவது நல்லதல்ல. முகத்தை நன்றாக கழுவிய பிறகு அல்லது குளித்து துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.