Home சமையல் குறிப்புகள் கொத்தமல்லித்தழை சூப்

கொத்தமல்லித்தழை சூப்

24

0638d31d-a6e4-476f-8fff-795ab9599cd5_S_secvpfதேவையான பொருட்கள்:

கொத்தமல்லித்தழை – 50 கிராம்
பூண்டு – 10
மிளகுத்தூள் – 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• கொத்தமல்லித்தழை, உரித்த பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் மல்லித்தழை, பூண்டு விழுது, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

• நன்றாகக் கொதித்து வந்த பின்பு இறக்கவும்.

• பரிமாறும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

• இந்த கொத்தமல்லித்தழை சூப் சூடாக சாப்பிட வேண்டும். உடலுக்கு வலிமை தரும் சூப் இது.