Home பெண்கள் அழகு குறிப்பு கை, கால் முட்டி பகுதிகளில் உள்ள கருமை நீங்கும் இயற்கை வழிகள்

கை, கால் முட்டி பகுதிகளில் உள்ள கருமை நீங்கும் இயற்கை வழிகள்

22

1443969177joint blackமூட்டுப்பகுதியை மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை சீர்செய்ய முடியும். இரத்த ஓட்டம் சீரானால் கறுப்புத் திட்டுக்கள் மறையும். தேங்காய் எண்ணெயை மூட்டுப் பகுதியில் விட்டு, 5 – 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்தால், நல்ல பலன் தெரியும். ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

இறந்த செல்களை உடனடியாக அகற்றும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சளுடன், பசும்பால் சேர்த்து, மூட்டுப் பகுதியில் தடவி, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் காயவிட வேண்டும். பின்னர், சோப் பயன்படுத்தி, மூட்டு பகுதியைக் கழுவ வேண்டும். தினமும் இதனைச் செய்து வந்தாலே, சில நாட்களில் நல்ல பலன் தெரியும்.

கற்றாழை ஜெல் சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோல் கருமை அடைவதைத் தடுக்கும். கற்றாழையைத் தோல் சீவி, அதனுள் இருக்கும் ஜெல்லை அப்படியே மூட்டுப் பகுதியில் பூசி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.

பாதி எலுமிச்சைப் பழத்தில் சிறிதளவு தேன் விட்டு, மூட்டுப் பகுதியில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, 15-30 நிமிடங்கள் அப்படியேவிட வேண்டும். பின்னர், தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். தேன் அதிக அளவு சேர்த்து, தினமும் மசாஜ் செய்தால், விரைவில் கருமை மறையும்.

கடலை மாவு, தயிர் சம அளவு கலந்து, மூட்டுப் பகுதியில் தடவி 15 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவலாம். கடலை மாவுக்குப் பதில் பாதாம் பருப்பை அரைத்தும் பயன்படுத்தலாம்.