Home சூடான செய்திகள் கேத்தி பெர்ரி விவாகரத்து… 6.5 மில்லியன் டாலர் வீடு கிடைத்தது!

கேத்தி பெர்ரி விவாகரத்து… 6.5 மில்லியன் டாலர் வீடு கிடைத்தது!

30

சமீ்பத்தில் ஐபிஎல் 5 தொடக்க விழாவில் தனது வசீகரக் குரல் மற்றும் அழகால் கவர்ந்திழுத்துச் சென்ற கேத்தி பெர்ரிக்கு விவாகரத்து முடிந்துள்ளது. விவாகரத்து உடன்பாட்டின்படி கணவர் ருஸ்ஸல் பிராண்ட் தனது பாரம்பரிய வீடு ஒன்றை பெர்ரிக்குக் கொடுத்துள்ளார். இந்த வீட்டின் மதிப்பு 6.5 மில்லியன் டாலராகும்.

ருஸ்ஸல் பிராண்ட் இங்கிலாந்தைச் சேர்ந்த காமெடி நடிகராவார். இவரும், பெர்ரியும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்தனர். லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட் இதை விசாரித்து இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.

விவாகரத்து உடன்பாட்டின்படி தற்போது இந்த லாஸ் ஏஞ்சலெஸ் வீடு பெர்ரிக்குக் கிடைத்துள்ளது. இந்த வீட்டை பெர்ரியும், பிராண்டும் சேர்ந்து வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.