Home ஆண்கள் ஆண்மை பெருக கூடுதல் ஆண்மை, பெண்மையை விரும்பினால் புற்றுநோய் ஏற்படும்

கூடுதல் ஆண்மை, பெண்மையை விரும்பினால் புற்றுநோய் ஏற்படும்

23

பெண்மையை அல்லது ஆண்மையை கூடுதலாக வெளிப்படுத்த விரும்பும் பதின்மவயதினருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாக ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தம்மை மிகவும் பெண்மையானவராக காட்டிக்கொள்வதற்காக பெண்கள் செயற்கை முறையிலான சூரியக்குளியலை கையாள்வதுடன் உடற்பயிற்சி செய்வதையும் தவிர்த்து வருகின்றனர். இவ்வாறான நிலைமைகளைக் கையாளும் பெண்களே அதிகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று அந்த ஆராய்ச்சியின் போது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று தாம் ஆண்மை மிகுந்தவர் என வெளிப்படுத்திக் கொள்வதற்காக புகைபிடிக்கும் ஆண்களுக்கும் புற்றுநோய் ஏற்படுகின்றது. ஆனாலும் தமது ஆண்மையை குறைத்துக் காட்டும் ஆண்களும் பெண்களும் புகைக்கும் வாய்ப்பு கூடுதலாக காணப்படுகின்றது. கூடுதல் ஆண்மை உள்ளவர்கள் என எண்ணும் இளைஞர்கள் புகைபிடிக்கும் வாய்ப்பு 55 சதவீதமாக உள்ளது. அதேபோன்று கூடுதல் பெண்மையை விரும்பும் பெண்களால் செயற்கை அழகுக்கலைகளை 32 சதவீதமும் உடல்ரீதியாக செயற்படாது வேறு வழிகளை கையாழும் வாய்ப்புக்கள் 16 சதவீதமாக இருக்கின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் இவ்வாராய்சிகள் மூலம் 9,435 பதின்மவயதினர் தங்களின் ஆண்மையை மற்றும் பெண்மையை வெளிப்படுத்த விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.