Home குழந்தை நலம் குழந்தை இல்லை என்ற கவலையா? கைகொடுக்கும் இயற்கை மருந்துகள்

குழந்தை இல்லை என்ற கவலையா? கைகொடுக்கும் இயற்கை மருந்துகள்

30

குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு பழக்கவழக்கங்களும் தான்.

நாம் தினமும் தினம் உட்கொள்கிற உணவுகளில் நமக்கே தெரியாத எண்ணற்ற ரசாயனங்கள் அடங்கியுள்ளன, இவை உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தி விடுகிறது.

இதனால் உடல் உறுப்புகள் பாதிப்படைவது மட்டுமின்றி, குழந்தையின்மை பிரச்னையும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.

இதற்காக எந்த மருத்துவமனைக்கும் சென்று அலைந்து திரியாமல், ஒரு சில இயற்கை வைத்தியங்களின் மூலமும் சரிசெய்து விடலாம்.

அரச இலை

அரச இலை ஆண்மைக்குறை போக்குவதுடன், பெண்களின் கர்ப்பப்பை பிரச்னையை சரிசெய்து, குழந்தை பேறு தரக்கூடியது.

அரச மரத்தின் இளம்தளிர் இலைகளை அரைத்து, தயிர் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும், ஆண்- பெண் இருவரும் சாப்பிட வேண்டும்.

இவ்வாறு சாப்பிடும் காலகட்டத்தில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள கூடாது.

பிரச்னையைப்பொறுத்து 48 நாளோ அல்லது 3, 4 மாதமோ சாப்பிட்டு வந்தால் அதன்பிறகு பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வாழைப் பூ

வாழைப் பூவை நசுக்கி சாறு எடுத்து,பனங்கல்கண்டு சேர்த்து அவ்வப்போது பெண்கள் சாப்பிட்டு வரலாம். வாழைப்பூவை பொரியல் செய்து ஆண் – பெண் ரெண்டு பேருமே சாப்பிடலாம், இதை பிரச்னை தீரும் வரை சாப்பிடலாம்.

மாதுளம் பூ

மாதவிலக்கு வந்த 3வது நாளில் இருந்து மொத்தம் ஏழு நாளைக்கு, தினமும் 4 மாதுளம்பூவை கஷாயம் பண்ணி, பனங்கல்கண்டு சேர்த்து காலை, மாலை குடிக்கணும்.

அடுத்தடுத்த மாதங்களும் இவ்வாறு சாப்பிட்டு வந்தால், மூன்று மாதங்களுக்கு பிறகு கர்ப்பப்பை பிரச்னை சரியாகி குழந்தை தங்குவதற்காக வாய்ப்புகள் அதிகம்.

கீழாநெல்லி

இதேபோன்று கீழாநெல்லி இலையை எடுத்து அரைத்து ஒரு கோலிக்காய் அளவு எடுத்து, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். இதையும் மாதவிலக்கான 3வது நாளில் இருந்து 7 நாள் சாப்பிட்டு வரலாம், அடுத்தடுத்து 3 மாசம் வரை சாப்பிடணும்.