Home குழந்தை நலம் குழந்தைக்கு தாய்பால் இருக்க மற்றது எதற்கு?

குழந்தைக்கு தாய்பால் இருக்க மற்றது எதற்கு?

15

21குழந்தைக்கு தாயப்பால் கொடுக்க பல தாய்மார்களுக்கு போதுமான அளவில் இல்லாமல் வற்றிய நிலை இன்று பெருமளவில் காணப்படுகிறது.இதனால் இவர்கள் குழந்தைகளுக்கு செயற்கை உணவு வகைகளை கொடுக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றனர். செயற்கை உணவில் சத்துகள் குறைவு, தாய்ப்பாலில் இயற்கை ஜீவசத்துக்கள் நிறைந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தாயாருக்கும் இது தெரிந்த உண்மை.ஆனால் பால் சுரக்க வில்லையே? என்று வேதனைப்படுகின்றனர். இதற்கு என்ன காரணம்? என்பதை ஆயுர்வேதம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

தாய்பால் குறைவுக்கு காரணம் :

தாயாருக்கு ஏற்படும் கோபத்தினால் உடற்சூடு அகிதரித்து தாயப்பால் வற்றிவிடுகிறது. அதுபோல துக்கத்தினால் தாதுக்களின் செயல்திறன் குன்றி விடுவதாலும் ஏற்படும். மேலும் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு கர்ப்பத் தரித்ததால் அதன் மூலம் வெறுப்படைந்து குழந்தை பிறந்ததும் அதனிடம் சிறிதும் பிரியமில்லாமையின் மூலமாகவும் தாயப்பால் வற்றிவிடும். அதிக உடல் உழைப்பு, பட்டினியிருத்தல் அல்லது சத்தான உணவை உட்கொள்ளாதிருத்தல் போன்றவையாலும் தாயப்பால் குறைந்துவிடுகிறது. இவ்வகை காரணங்களை தாய்ப்பால் நன்கு ஊறி வரும் காலங்களில் நீக்க வேண்டும்.வயதின் முதிர்ச்சி காரணமாக கருத்தறிக்கும் பெண்ணிற்கு உடலின் நெய்ப்புத் தன்மை குறைவால் பிரசவம் கடுமையாகிறது. மேலும் தாய்ப்பாலும் அதிக அளவில் சுரப்பதில்லை.