குழந்தைகளுக்கு மிக வேகமாக நோய்த்தொற்றுக் கிருமிகள் பரவி விடும். அதனாலேயே குழந்தைகள் நலனில் மிக கவனமாக இருப்போம். கைக்குழந்தையாக இருந்தால் ஆளாளுக்கு தூக்கி கொஞ்சினால் கூட உடம்புவலி உண்டாகும். அதேபோல் குழந்தைகளுக்கு செரிமானக்கோளாறுகள் அடிக்கடி உண்டாகும். அதனால் வயிற்றுவலி வரும்.
இதுபோல் பல்வேறு நோய்களும் குழந்தைகளை வேகமாகத் தாக்கக்கூடியது. உடனுக்குடன் எல்லாவற்றிற்கும் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய கைவைத்தியங்கள் சிலவற்றையும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
அப்படி என்னென்ன பிரச்னைகளுக்கு குழந்தைகளுக்கு என்னென்ன மருந்தைக் கொடுக்கலாம்?
வயிற்றுப்போக்கு – குழந்தை குடிக்கும் பால் சரியாக செரிக்காமல் இருந்தாலோ அல்லது பாக்கெட் பாலால் கொடுப்பதாலோ கூட சிலசமயங்களில் வயிற்றுப்போக்கு உண்டாகலாம். அதற்கு மிகச்சிறந்த மருந்தாக விளங்குவது வசம்பு தான். வசம்பை உரசிக் காலையும் மாலையும் பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வர வயிற்றுப்போக்கு நிற்கும்.
சளி – குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் பிரச்னைகளில் ஒன்று சளித்தொல்லை. துளசிஇலைச் சாறில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுத்தாலே சளித்தொல்லை குணமடையும்.
கக்குவான் – பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் கங்குவான் நோய் தீரும்.
சாதாரணக் காய்ச்சல் – தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வந்தால், சாதாரணக் காய்ச்சலாக இருந்தால் உடனே குணமடைந்துவிடும்.
உடம்பு வலி – சிறிய வெங்காயத்தைத் தட்டி அதன் சாறைக் கைகால்களில் தேய்த்துவிட்டு, சிறிதுநேரம் கழித்து நன்கு வெந்நீரில் குளிக்க வைத்து சாம்பிராணி புகை போட்டுவிட்டாலே உடம்பு வலி குறைந்து சுகமாகத் தூங்க ஆரம்பிக்கும்.