குழந்தைகளின் கவனிப்பில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோருக்கு, குழந்தையின் பாதுகாப்பு நலன் மிகவும் முக்கியமானது.
ஒரு குழந்தைக்கு, நல்ல பெற்றோராக இருப்பதும் கடினம் என்று கூறுகிறார்கள். ஆனால், எளிதாக இருக்க, சில வழிகளை கையாள வேண்டும்.
பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளின் திறமையை, மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு சொல்வார்கள். உங்கள் குழந்தைகளுக்கிடையே உள்ள திறன்களை, மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதன் மூலம் அவர்களுக்குள் விரோதத்தை வளர்க்கும். ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இவ்வாறு செய்வதால், உடன்பிறப்புகளுக்கிடையே பிளவு உருவாக்கலாம்.
குழந்தைகளுக்கு இடையிலான மதிப்பிடுதலை தவிர்த்தால், குழந்தைகளுக்கு, உங்கள் மீது ஏற்படும் வெறுப்புணர்வுகளை தவிர்க்கலாம். உங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமை, மற்றவர்களின் குழந்தைக்கு இல்லாமல் இருக்கும். அதை முதலில் கண்டறிய வேண்டும். குழந்தைகளின் செயல், சில நேரங்களில் எரிச்சலூட்டும் வகையில் இருக்க வேண்டும்.
படிக்கும் போது, எல்லோருமே தவறு செய்வது இயல்பு. தவறை, மென்மையாக திருத்த வேண்டியது முக்கிய கடமை. ஒரு பெற்றோர் என்ற முறையில் குழந்தைகளுக்கு வழிக்காட்டியாக இருக்க வேண்டுமே தவிர, உங்களின் கருத்துக்களை ஏற்க, ஒரு போதும் கட்டாயப்படுத்தக் கூடாது.
அப்பொழுது குழந்தைகள் இதுபோன்ற சூழல்களை புரிந்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாமல் இருப்பார்கள். இந்த நேரத்தில் பொறுமையிழந்து, அவசரப்பட்டு, அவர்களை திட்டக்கூடாது. இது, குழந்தைகளிடையே தேவையற்ற மன அழுத்தத்தையே உண்டாக்கும். இதுபோன்ற சமயத்தில், பொறுமையாக இருந்து, கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
நேரம் கிடைக்கும் போது, சுற்றுலா அழைத்து செல்வதும், இயல்பாக விளையாட விடுவதும், அவர்களுக்கு பிடித்துப் போகும். குழந்தைகளை, அவர்களின் சொந்த
தவறான வழியில் செல்லாமல் இருக்க, கொஞ்சம் கடிவாளமும் இருக்க வேண்டும்.
அவசரப்பட்டு சொல்லுகின்ற ஒரு வார்த்தை, மனம் நோகச் செய்யும். வார்த்தைகளை எப்போதும் சரியாக கையாள வேண்டும். நல்ல நண்பர்களை எப்படி தேர்வு செய்வது என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். முக்கியமாக, குழந்தைகளிடம் கூடுதல் நேரம் செலவழித்தால், தங்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லி விடுவர். இது, எதிர்கால வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.