Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி வளருங்கள் !

குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி வளருங்கள் !

26

66ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை என்பது மிகவும் இன்றியமையாதது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. பெற்றோர்கள் அனைவரும் தம் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை வளர்ப்பது அவர்களின் கடமையாகும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .’நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? ‘ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு, மண்டு, மண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்