Home பெண்கள் அழகு குறிப்பு குளிர் காலத்தில் உதட்டின் அழகை பராமரிக்க இயற்கை வழிகள்

குளிர் காலத்தில் உதட்டின் அழகை பராமரிக்க இயற்கை வழிகள்

24

முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள். பெண்களுக்கு தங்களின் உதடுகள் சிவப்பாக இருக்கவேண்டுமென்பது ஆசை.

இத்தகைய உதடுகளை மென்மையாகவும், சிவப்பாகவும் பராமரிக்க சில மிக எளிதான குறிப்புகளை பின்பற்றினாலே போதும். உங்களுக்கு உதவும் அத்தகைய ஈசி டிப்ஸ் இதோ…

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.

மழை மற்றும் குளிர் காலங்களில் உதடுகளில் வெடிப்பு ஏற்படாதவாறு உதடுகளில், ‘வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.

வெயில் காலத்தில் வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, ‘சன்ஸ்கிரீன் லோஷன்’ தடவுங்கள்.
தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ் ஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள். இதனால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரிய வாய்ப்புள்ளது.

உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தவும் கூடாது. அவ்வாறு செய்தால் உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

உதவு எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்க நீர்சத்து நிறைந்த காய்கறிகள்,பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

இரவில் படுக்க போகும் முன் உதட்டில் உள்ள லிப்ஸ்டிக்கை எடுத்து விட்டு வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போட்டு சிறிது நேரம் மசாஜ் செய்த பின்னர் படுக்க செல்லவும்.

உதட்டில் உள்ள தோலை கடிக்காதீர்கள். இது உதட்டின் அழகை கெடுத்து விடும்.