குளியலை ஒரு கடமையாக நினைத்துக் காக்காய் குளியல் குளிப்பவர்கள் தான் நம்மில் அதிகம்.
குளியலை உடலை சுத்தமாக்கும் ஒரு அன்றாடச் செயலாக நினைக்காமல், அதை அழகு
சம்பந்தப்பட்ட, மனசு சம்பந்தப்பட்ட ஒரு செயலாக செய்து பாருங்கள்.
மாற்றங்களை உணர்வீர்கள். குளியலில் என்ன ஸ்பெஷாலிட்டி வேண்டி கிடக்கிறது
என்று அலுத்துக் கொள்பவர்களுக்காக இதோ சில டிப்ஸ்…
*
பிரசவித்த பெண்களுக்கு நாற்பது நாட்களுக்கு குளியல் சென்டி மென்ட் ஒன்று
உண்டு. சிலவகை மூலிகை எண் ணெய்களால் அவளுக்கு மசாஜ; செய்து, குட்டையான
ஸ்டூலில் உட்கார வைத்து வெந்நீர் குளியல் கொடுப்பது சில பிரிவின ரிடையே
இப்போதும் நடைமுறையில் உள்ள பழக்கம். இப்படிச் செய்வதால், பிரசவித்த
பெண்ணின் உடல் கழிவுகள் அகன்று, கர்ப்பப்பை பழைய அளவுக்குச் சுருங்கவும்,
தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் செய்யுமாம்.
* மனைவி, கணவனைப்
பார்த்துப் பாடும் நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன் என்ற பாடல்
கேட்க இதமாக இருக்கிறது இல்லையா? அதையே உங்கள் வீட்டிலும் நடை
முறைப்படுத்திப் பாருங்களேன். கணவனும், மனைவியும் சேர்ந்து குளிப்பது,
அவர்களுக்கிடையே துளிர்விட ஆரம்பித்திருக்கும் மனஸ்தாபங்களை முளையிலேயே
கிள்ளியெறிய உதவுவதாக மனோவியல் நிபுணர்கள் நம்புகிறார்கள்.
*
வாரம் ஒரு நாளாவது நிதானமாக, நீண்ட நேரம் குளியுங்கள். குறைந்தது ஒரு மணி
நேரத்தையாவது குளியலுக்குப் பயன்படுத்துங்கள். அந்த ஒரு மணி நேரமும் எந்த
விதத் தொந்த ரவுகளும், டென்ஷனும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேண்டு
மானால் உங்களுக்கு விருப்பமான பாடலை அல்லது இசையை ஒலிக்க விட்டுக்
கேட்டுக் கொண்டே குளிக்கலாம்.
* தலைக்குக் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையை அலசி டவலால் கட்டிக் கொள்ளுங்கள். பிறகு உடம்புக்குக் குளியுங்கள்.
* உங்களுடையது வறண்ட சருமமாக இருந்தால் முதலில் உங்கள் உடலில் ஏதேனும் எண்ணெயைத் தடவிக் கொண்டு குளிக்கவும்.
*
பாதங்களில் வெடிப்புகள் இருந்தால், கால்களை வெதுவெதுப்பான தண்ணீரில்
சிறிது உப்பு கலந்து ஊற வையுங்கள். பிறகு பியூமிக் ஸ்டோனால் வெடிப்புகளைத்
தேய்த்துவிட்டுக் குளிக்கவும். குளித்து முடித்ததும் கால் களைத்
துடைத்துவிட்டு வாசலின் தட விக்; கொள்ளவும்.
* குளிக்கும்
தண்ணீரில் சில துளிகள் வாசனை எண்ணெய்களைக் கலந்து குளிக்கலாம். ஒரு
கைப்பிடியளவு ரோஜாப்பூ இதழ்களைப் போட்டும் குளிக்கலாம். உடல் நறுமணம்
பெறும்.
* மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த தண்ணீரில்
குளிப்பதைத் தவிர்க் கவும். குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது சருமத்தின்
இளமையைக் குலைத்து விடும் என்பது கட்டுக்கதை. உடலின் வெப்ப நிலைக்கேற்ற
தண்ணீரில் குளிப்பதே சிறந்தது.
* குளிக்க உபயோகிக்கும் சோப்பில்
கவனம் செலுத்துங்கள். வறண்ட சருமம் உடையவர்கள் கிளிசரின் கலந்த எண்ணெய்
பசையான சோப்புகளை உபயோ கிக்கலாம். முகத்திற்கு ஃபேஸ்வாஷ போட்டுக்கூட
சுத்தப்படுத்தலாம்.
* பருக்கள் இருந்தால் வேப்பிலை கலந்த சோப்புகளை உபயோகிக்கலாம்.
*
குளித்து முடித்ததும் உடல் முழுவதையும் நன்றாகத் துடைக்கவும்.
காதுகளுக்குப் பின்னால், அக்குள், தொடை இடுக்குகள் போன்ற பகுதிகளைத்
துடைக்க வேண்டும். பிறகு முகம் மற்றும் கைகளில் ஏதேனும் ஒரு மாயிச்சரைசிங்
கிரிம் அல்லது பாடி லோஷன் தடவிக் கொள்ளவும்.
* குளியலுக்குப் பிறகு ஒரு டம்ளர் பழ ஜுஸ் மற்றும் சிறிய கப் சாலட் சாப்பிடவும். சிறிது நேர ஓய்வும் முக்கியம்.