Home குழந்தை நலம் குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகள் அதிக உணவு சாப்பிடுகிறார்கள்

குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகள் அதிக உணவு சாப்பிடுகிறார்கள்

25

download1-615x408குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகள் அதிக உணவு சாப்பிடுவதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
சர்வதேச அளவில் குழந்தைகள் பலர் உடல் பருமனாகின்றனர். இதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே இது குறித்து லண்டன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர் லாரா மெக்டொனால்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். தினமும் இரவில் 11 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கும் குழந்தைகள் உடல் பருமனாகி விடுவது தெரிய வந்தது.
குறைந்த நேரம் தூங்குவதால் அவர்கள் தங்களுக்கு தேவையான சாப்பாடு மற்றும் நொறுக்குத்தீனியை அதிக அளவில் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதனால் அவர்களின் உடம்பு பருமனாகி விடுவதுடன் அதற்கு தகுந்த உயரத்துடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு முந்தைய ஆய்வில் மிகவும் தூக்கம் குறைவாக உள்ள குழந்தைகளே அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பதாக கண்டறியப்பட்டது. தற்போது 11 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கும் குழந்தைகள் அதிக உணவு சாப்பிட்டு உடல் குண்டாகின்றனர் என அறியப்பட்டுள்ளது