Home ஆரோக்கியம் காமம் என்பது என்ன?

காமம் என்பது என்ன?

33

Captureமனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம் மிகமிகச் சிறந்தது. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்க்கும் இதர மனிதர்கள் உணர்வுகள் எல்லாம் இதற்கு முன் மிகமிக சாதாரணமாகும்.

காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே தோன்றக்கூடிய ஒன்று. யாரும் சொல்லித்தராமலே விலங்குகள் குட்டி போடுகின்றன. பறவைகள் முட்டை இடுகின்றன. எனவே இதைப்பற்றி படித்து தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? என்று அசட்டையாக சிலர் நினைக்கலாம். இதற்கெல்லாம் விடை சொல்கிறது காம சாஸ்திரம்.

வயிற்று பசிக்கு உணவிடுவது போல் உடல்பசிக்கு காம விருந்து வைப்பதில் தவறில்லை. இது இயல்பான மனித உணர்வு என்பதால் இதை தடுக்க நினைப்பதோ அல்லது தவிர்க்க நினைப்பதோ அவசியம் இல்லை.

விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் இன விருத்திக்காக மட்டுமே ஒன்று சேர்கின்றன. மேலும் அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன. ஆனால் மனிதனின் நிலை வேறு. காம வேட்கையை எல்£ காலங்களிலும் சிறப்பாக உயர்வாக அனுபவிக்க ஆணும் பெண்ணும் விரும்புவதால் அவர்களுக்கு சில விதிமுறைகளை விளக்குவது மிகவும் பயன் தருவதாக இருக்கும் என்று தெளிவு பட இருக்கிறது.

ஆண் பெண் சேர்க்கையானது இன விருத்திக்காக மட்டுமே அமைவதல்ல. அதையும் மீறி அங்க உடல் இன்பம் பிரதானமாக அமைகிறது. மேலும் எந்த சமயத்திலும் அனைத்து காலத்திலும் இன்பம் துய்க்க முடியும் என்பதால் அதற்கென சில நியதிகளை வகுத்து கொள்வது நல்லது.

கனவன் மனைவி, காதலன் காதலி, விலைமகளிர், காமவேட்கை நிறைந்தவர் என்ற பிரிவுகள் எல்லாம் பிற உயரினங்களில் இல்லை. மேலும் எந்த உயரினமும் பரஸ்பரம், திருப்தி அடைதோ, நிரந்தர உறவு வைத்துக்கொள்வதோ இல்லை. அதனால் பூரண இன்பம் பெற விரும்பும் மனித குலத்துக்கு காமசாஸ்திரம் அவசியமே.

உடல் நல்ல நிலையில் இருக்க உணவு எவ்வளவு முக்கியமோ அது போல் உடலும் மனமும் இனிமை பெற கலவி இன்பமும் அவசியமாகும். கலவி இன்பத்தை அனுபவிப்பதில் பெண்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆண் பெண் இருவரும் இணையும் போது தான் இன்பத்தின் எல்லை செல்ல முடிகிறது.