Home உறவு-காதல் காதல் உங்களை எப்படியெல்லாம் முட்டாளாக்குது தெரியுமா…?

காதல் உங்களை எப்படியெல்லாம் முட்டாளாக்குது தெரியுமா…?

41

ஓடிப்போகும் ஐடியா
உங்கள் பெற்றோர்களுக்கு உங்கள் காதலை பற்றி தெரியவில்லை என்றாலோ அல்லது உங்கள் காதல் மீது விருப்பம் இல்லை என்றாலோ, வீட்டை விட்டு ஓடி போக நினைப்பது காதலர்களின் வழக்கமாகும். காதலின் பேரை சொல்லி இப்படி ஓட வைக்கும் இந்த ஐடியா உங்களை முட்டாளாக காட்டும்.
அந்த தீய பழக்கங்கள்
தீய பழக்கங்களில் விழுவதற்கு காதல் தான் குற்றம் சாட்டப்படும். தீய பழக்கம் உள்ள பெண்ணை நீங்கள் காதலித்தீர்கள் என்றால், உங்களுக்கும் குடி மற்றும் புகைப்பிடிக்கும் தீய பழக்கங்கள் ஒட்டிக் கொள்ளலாம்.
வலியை உணரமாட்டீர்கள்
காதல் வந்தால் வலியை உணர முடியாது. அதற்கு காரணம் வலியை லேசாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் வந்துவிடும். எப்படி என கேட்கிறீர்களா? பின்ன என்ன காதலில் விழுவதே செலவே இல்லாமல் தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டு வலியை பெறுவது தானே.
குருட்டுத்தனமாக காதலை பற்றி பேசுவது
குருட்டுத்தனமான காதல் கூட உங்களை ஒரு வழியில் பைத்தியகாரத்தனமாக உணர வைக்கும். குருட்டுத்தனமான காதலை விரும்புபவர்கள் பலர் உள்ளனர். அதற்கு காரணம் தங்களுக்கானவர்களை கண்டு பிடிக்கும் எண்ணமே.
பிறருக்காக நேரம் ஒதுக்காமல் போவது
காதல் உங்களுக்கு என்ன செய்தது என ஏற்கனவே கேட்டோம். இதோ இன்னொரு பதில் – இந்த உறவை மீறி உங்களுக்கென ஒரு வாழ்க்கை உள்ளதென்பதை அது மறக்க வைக்கும். உங்களுக்கு குடும்பம் மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு உங்களுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதையும் அது மறக்கடிக்கும்.

உங்களால் கோபப்பட முடியாது
என்ன தான் முயற்சி செய்தாலும் கூட சில காதலர்கள் தங்களின் காதலன் அல்லது காதலி மீது மனதார கோபமே படமாட்டார்கள். சரியான நபரை காதலிப்பதால் கிடைக்கும் பெரிய பலன் இது.
அளவுக்கு அதிகமாக செலவழிப்பது
உங்கள் காதலனுக்காகவோ அல்லது காதலிக்காகவோ அளவுக்கு அதிகமாக செலவழித்து, பின் கடைசியில் காசு இல்லாமல் போகும் போது, அதற்காக வருந்துவது. இது தான் காதல் உங்களுக்கு தருவது.
நம்பிக்கையற்ற அழைப்புகள்
உங்கள் ஜோடிக்காக நம்பிக்கையற்ற அழைப்புகள் மற்றும் மணிக்கணக்கான காத்திருப்புகள் கூட உங்களுக்கு ஒரு வழியில் பைத்தியகாரத்தனமான உணர்வை ஏற்படுத்தும்.
சமரசங்களில் ஈடுபடுவது
சமரசங்களில் ஈடுபட்டு அதை நினைத்து பின்னாளில் வருந்துவது. இப்படி பார்க்கையில் ஒரு உறவில் பெண்களே அதிக அளவிலான சமரசத்திற்கு உடன் படுகிறார்கள். ஆனால் மறுபுறம் ஆண்களோ, தாங்கள் சமரசத்தில் ஈடுபடுவதாக நினைத்தாலும், துரதிர்ஷ்டவசமாக அப்படி இல்லை.
முடிவில்லா இன்பம்
காதல் என்றால் முடிவில்லா ஆனந்தமும், சந்தோஷமும் மட்டும் தான் என்ற நினைப்பு உள்ளதா? காதல் என்பது படுக்கையில் விரிக்கப்பட்ட ரோஜா பூக்கள் என்ற எண்ணத்தில், பலர் தங்கள் காதலன் அல்லது காதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதே கிடையாது. அப்போது தான் பைத்தியகாரத்தனமான உணர்வை காதல் அளிக்கும்.