யார் சொல்வதையும் கேட்டகாமல் அடாவடித்தனமாக திரியும் ஆண்கள் கூட இந்த காதலில் விழுந்துட்டா அப்புறம் அவங்க அவ்ளோதா, காதலிச்சிட்டு ஆண்கள் படம் பாடு இருக்கே… கண்டிப்பாக காதலுக்கு முன், பின் என்று இரு வேறுப்பட்ட குணாதிசயம் ஆண்களுக்கு உண்டு அதைப் பற்றி தான் இனிப் பார்க்கப் போகிறோம்…
முறுக்கு மீசையும், முரட்டு தாடியும் என காட்டுத்தனமாக சுற்றிக் கொண்டிருந்தவன், மை பூசிய கண்களைக் கண்டதும் பொய் பேச ஆரம்பித்துவிடுகிறான்.
காதலில் விழுந்தப் பிறகு, நண்பர்கள் வட்டாரம் பச்சை பச்சையாய் திட்டினாலும், உச்சுக்கொட்டியப் படியே “அவளை” ரசிப்பதும், வர்ணிப்பதுமாக ஆண்களின் நாட்கள் நடைப்போடத் தொடங்கும்.
நக்கல், நையாண்டி, குறும்பு
காதலில் விழும் முன், நண்பர்களுடன் நக்கலும், நையாண்டியுமாக குதுகலாமாக சுற்றிக் கொண்டிருந்த ஓர் ஆணின் வாழ்க்கை, காதலில் விழுந்தப் பின் ரோஜா மலர்வனம் என்ற கற்பனை பாலைவனதிற்குள் விழுந்துவிடுகிறது.
சிகை அலங்காரம்
ஆண் சிங்கத்தின் பிடரியைப் போல முகத்தை சுற்றி முடி வளர்த்துத் திரிந்த நண்பன், காதலுக்குப் பிறகு, கொரியன், ஜப்பான்காரன் போல மொளுக்கட்டையாக முகத்தை வைத்துக் கொள்வார்கள்.
கார்னர் சீட்
திரைப்படத்திற்கு சென்றாலே நட்ட நடு சீட்டு தான் வேண்டும், இல்லையேல் படம் நல்லா தெரியாது, ஸ்க்ரீன் சைடாக இருக்கிறது, தலை வலிக்கும் என புலம்பிக் கொண்டு இருந்தவன், கார்னர் சீட்டை தேடித் பிடித்து தானாக ஒரு படத்தை ஓட்டிக் கொண்டிருப்பான்.
வேகம்
அம்மா, அக்கா, அண்ணி, தங்கை என யார் சொல்லியும் குறையாத நூறைத் தாண்டும் ஓர் ஆணின் வாகனத்தின் வேகம்,காதலி பின் இருக்கையில் அமர்ந்தப் பிறகு குறைந்துவிடுகிறது.
காசு, பணம், துட்டு
ஆண் நண்பர்களுடன் சுற்றித் திரியும் போது தினம் தோறும் பணம் இருந்த பர்ஸில், காதலுக்கு பிறகு நயா பைசா இருக்காது.
ஃபேஸ் புக்
ஃபேஸ் புக்கில் நூறு பெண்களுடன் கடலை வறுத்த விரல்கள், ஒரே பெண்ணுடன் நொண்டி விளையாட்டிக் கொண்டிருக்கும் (அப்படி ஹ்ம்ம், அப்பறம்’னு ஆயிரம் தடவ பேசுறதுக்கு, ஸ்ரீ ராம ஜெயம் எழுதலாம்!! புன்னியமாவதுக் கிடைக்கும்)
ஹ்ம்ம், அப்பறம் – மணி நேரம்!
சும்மாவா சொன்னாங்க, கூத்தாடி காதலிச்சா, மொபைல் நெட்வொர்க் காரனுக்கு சந்தோஷம்’னு. நண்பர்களிடம் ஓரிரு நொடிகளில் கால் பேசாத அந்த காதலில் விழுந்தவர்கள், காதலியிடம் மட்டும் மணிக்காக பேசும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள்.